பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 127 |
நான்:மாநாட்டுக்கே நான் போகவில்லை; நடத்தியவர் யாரென்பதும் எனக்குத் தெரியாது. அவர்:விடுமுறை நாள் தானே, போயிருக்கலாமே? நான்:ஆம், கட்டாயம் போயிருப்பேன், என் குழந்தைக்கு அம்மை வார்த்திருந்தது; பாடநூல் ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன்; வெளியீட்டாளரும் கும்ப கோணத்திலிருந்து வந்திருந்தார். அதனால் போக இயலவில்லை அது மட்டுமன்று. எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே நடந்த, கலைஞர் எழுதி நடித்த ‘காகிதப்பூ’ நாடகத்திற்கும் செல்லவில்லை. அவர்:வகுப்பறையில் அரசியல் பற்றிப் பேசுவதுண்டா? நான்:உள்ளபாடங்களை நடத்தவே 40 மணித் துளிகள் போதவில்லை. அரசியல் பேச நேரம் ஏது? சாதி, மொழி பற்றிப் பாடங்களில் வந்திருந்தால் இரண்டும் பற்றிப் பல மேற்கோள் காட்டுவேன். அவர்:உங்கள் கவிதைகளை எழுதுமாறு, வகுப்பறையில் மாணவர்களிடம் கூறுவீர்களா? நான்:கவிதை யார்வமுள்ள பிள்ளைகளிடம் எழுதச் சொல்லுவேன், அதுவும் வீட்டில் எழுதி வருமாறு கொடுப்பேன். அவர்:அஞ்சலில் சேர்க்குமாறு மாணவர்களிடம் சொல்வீர் களா? நான்:பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது வழி யிலுள்ள அஞ்சற் பெட்டியிற் போடச் சொல்லுவேன். அவர்:பாடங்களைச் சரியாக நடத்துவதில்லையாமே? நான்:நான் நடத்தவில்லையென்றால் பிள்ளைகள் மிகுந்த மதிப்பெண்கள் எப்படிப் பெற முடியும்? அவர்:சில அரசியல் கட்சிகளைப் பற்றி இழிவாக வகுப்பறையில் பேசுவதுண்டா? |