பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்143

செய்தி வந்தது. இதைப்பார்த்தும் நான் வியப்படைந் தேன். இவர்களுக்கு எப்படிப் பிறந்த நாள் தெரியும்? என்று.

இரண்டொரு நாளில் மதுரை முரசொலி அலுவலகத் திலிருந்து, நிருபர் வந்தார். ‘உங்கள் வாழ்க்கைக்குறிப்பு, உருவப் படம் முதலியன வேண்டும்’ என்றார். ஏன்? என்றேன். ‘பேராசிரியர் அன்பழகனார் முரசொலியில் வந்த செய்தியைப் படித்து விட்டு, நம் முடியரசன் மணி விழாச் செய்தியை இப்படியா வெளியிடுவது? நல்ல முறையில் வெளிவிட வேண்டாமா? என்று கடிந்து கொண்டார். அதனால் மறுபடியும் வெளியிடுவதற்கு வாங்கி வரச் சொன்னார்கள்’ என்றார். அப்படியானால் முதலில் வந்த செய்தி நீ கொடுத்ததுதானா? என்றேன். அதற்குள் அருகிலிருந்த என்மகன் பாரி ‘நான் தான் எழுதிப் போட்டேன்’ என்றான். பின்னர்ப் படமும் செய்தியும் ச.அமுதன் எழுதிய வாழ்த்தும் வெளிவந்தன.

1980 நவம்பர் 16 ஆம் நாள் தி.மு.க. தலைமை மாநில இலக்கிய அணி விழாவும் என் மணிவிழாவும் சென்னையில் இலக்கிய அணியின் சார்பில் நடைபெறவிருப்பதாகக் குறிப்பிட்டு என்னை வருமாறு எழுதியிருந்தனர். நான் செல்ல அணியமாகிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வந்திருந்த ஈரோட்டு நடராசன், ‘மணி விழா என்றால் நீங்கள் மட்டுமா செல்வது? குடும்பத்துடன் புறப்படுங்கள்’ என்று முந்நூறு உரூவா தாமே கொடுத்து வற்புறுத்தி வண்டி யேற்றி விட்டாh.

விழா, மயிலையில் உள்ள ஒப்பனை செய்த யோகலட்சுமி திருமண மண்டபத்தில் தா.அழகு வேலனார் தலைமையில் நடந்தது. கலைஞர், பேராசிரியர் அன்பழகன், சாதிக்பாட்சா கவிஞர். பொன்னி வளவன், கவிஞர் குடியரசு, ஆற்காடு வீராச்சாமி, க.சுப்பு, கவிஞர் நா.காமராசன் பலரும் வாழ்த்துரை வழங்கினர். தலைமை தாங்கிய அண்ணன் அழகுவேலன் நாங்கள் கலந்து கொண்ட இந்தியெதிர்ப்பு மறியல் போராட்ட நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவுபடுத்தினர். பின்னர் ஒவ்வொரு வரும் தத்தமக்குத் தெரிந்த வற்றை எடுத்துரைத்தனர். நா.காமராசு, ‘கலைஞரின் கால்தூசியை வணங்குவதாகவும், கலைஞரின் கவிதைநடைபெருக வேண்டும் எனவும், கலைஞர் ஆணை யிட்டால் ஆயிரம் ஆயிரம் இளைஞரைக் காலடியிற் கொணர்ந்து சேர்ப்பதாகவும்’ முழங்கினார்.