பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்157

மேலும் என் நூல்கள் பல்கலைக் கழகங்களிற் பட்டம் பெறுவதற்குப் பலரால் ஆய்வு செய்யப் பெற்றுள்ளன.

ச.சார்லுசு என்பார் 1968ஆம் ஆண்டு, கேரளப் பல்கலைக் கழகத்தில் ‘முடியரசன் படைப்புகள் ஒரு திறனாய்வு’ என்னுந் தலைப்பில் தமிழ் முதுகலைப் பட்டத்திற்காக ஆய்வு செய்து ள்ளார்.

சா.நாகராசன் என்பார், 1980 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘கவிஞர் முடியரசனின் பூங்கொடி - ஒரு திறனாய்வு’ என்னுந் தலைப்பில், எம்.ஃபில் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

ப.நீலகண்டன் என்பார், ‘கவிஞர் முடியரசனின் பூங்கொடி - ஓர் ஆய்வு’ என்னுந் தலைப்பில் 1980 ஆம் ஆண்டு, மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

ப.இராமசாமி என்பார் ‘முடியரசனின் இரு காப்பியங்கள்’ என்னுந் தலைப்பில் 1980-ஆம் ஆண்டு, மதுரை - காமராசர் பல்கலைக் கழகத்தில், எம்.ஃபில் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

வீ.உண்ணாமலை என்பார், 1982ஆம் ஆண்டு, அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் ‘முடியரசனின் பூங்கொடி - ஒரு திறனாய்வு’ என்னுந்தலைப்பில் எம்.ஃபில் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

ஸ்ரீ குமார் என்பார், 1987 ஆம் ஆண்டு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், ‘முடியரசன் படைப்புகள்’ என்னுந் தலைப்பில் முனைவர் (டாக்டர்) பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

ச.நாகராசன் என்பார், 1985 ஆம் ஆண்டு, திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் ‘முடியரசன் கவிதைகளில் சமுதாயத் தாக்கம்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் மதுரை மீனாகுமாரி, அண்ணாமலை நகர் உண்ணா மலை, சென்னையன்பர், நாகர் கோவிலன்பர், வேலூர் அன்பர் முதலியோர் குறிப்புகள் கேட்டிருந்தனர். அவர் பெயர் முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை.

சில பாடல்கள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சில, செக் மொழியிலும் உருசிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.