பக்கம் எண் :

166கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

எனக்கும் பெருமகிழ்வைத்தருகிறது. ஆதலின் மாணவர் பாராட்டு முதன்மை பெறுகிறது.

‘தாங்கள் இயற்றியுள்ள ‘அன்புள்ள பாண்டியனுக்கு’ என்ற உதவி நூல், எங்களுக்குப் பாடமாக வந்துள்ளது. எங்களுக்கு (மாணவர்
களுக்கு) இவ்வளவு அரிய பாடத்தை மிகவும் தெளிவாக, வீரத்துடன் இனிமையாக இயற்றியிருக்கிறீர்கள். மாக்களாகப் பிறந்த இச்சமுதாயத்தை மக்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு எங்களைப் போன்ற மாணவர்களால் நன்றி சொல்லும் அளவிற்குக் கூடத் தகுதி யில்லை......... எப்பொழுது
தான் தமிழ் மொழி உலக அரங்கில் ஏறுவது?

க.வெ.இராசகோபால்
சத்திய மங்கலம் எட்டாம் வகுப்பு
அரசினர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி.

18.1.1971

'சென்ற ஆண்டு ஒன்பதாம் வகுப்பில், உங்கள் 'முகில் விடு தூது' என்னும் பாடலைத் படித்தேன். பாரதி தாசன் போன்ற சீர்மிகு கவிஞர் வரிசையிலே சிறந்து நிற்கின்றீர்கள். திறமையுள்ள வர்களை உலகம் போற்ற வேண்டும். ஆனால் தாங்களோ தங்கள் புகழோ அதிகமாக உலகிற்கு இன்னும் விளம்பரமாகவில்லை என்றே நினைக்கிறேன். தங்கள் புகழ் குன்றின் மேலிட்ட விளக் காய்த் திகழ எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

திருவில்லியுத்தூர்.கே.மணிவண்ணன்

26.7.75பத்தாம் வகுப்பு சி.எம்.எஸ்.உயர்பள்ளி.

'நான் தங்கள் கவிதைக்கு அடிமையாகி விட்டேன். ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். தங்கள் 'முகில் விடு தூது' என்ற கவிதை யைப் பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன். ஆனால் காலம் கிட்டவில்லை. காலம் கிட்டவில்லை யென்றால்