பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்167

கடிதம் கூடவா கிட்டாமல் போய் விடும்?. இன்றுதான் எங்கள் தமிழாசிரியர், தங்கள் கவிதையைக் கற்றுக் கொடுத்தார். மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கற்றேன். உடனே கடிதம் எழுத நினைத்தேன். முடித்தேன்.'

மலரில்லம்.ஜே.இராச சேகரன்

பொன்மலை.7.1.76.

தங்களுடைய கவிதையான 'முகில் விடு தூது' என் மனத்தைக் கவர்ந்தது. 'கம்பளியை விற்றுக் கடன் கழித்தேன்' என்ற வரி, தலைவியினுடைய வறுமையை அளந்து காட்டுகிறது. நான் தங்களுடைய மாணவனாக இருந்திருந்தால் உங்களைப் பார்த் திருப்பேன், பேசியிருப்பேன்; கேள்விகள் கேட்டு உங்கள் கருத்தைத் தெரிந்து கொண்டிருப்பேன். இப்பொழுதும் நான் உங்களை என் ஆசிரியராகவே மதித்து இக்கடிதத்தை எழுதுகிறேன். நான் தங்களை நேரில் காணும் வாய்ப்பு வாழ்நாளில் ஒருமுறை யேனும் கிட்டாதா?'

8.3.1985ப.விசயநாதன்

அரசினர் மாணவர் விடுதி,
அனந்தபுரம், செஞ்சி வட்டம்.

இவ்விளைய உள்ளங்களில் கவிதை ஈடுபாடு, அதைப் பாராட்ட வேண்டுமென்ற எண்ணம், சமுதாய மறுமலர்ச்சியில் அக்கறை, தமிழிற் கொண்டுள்ள ஈடுபாடு, எழுத்து நடை, தம்மிற் பெரியரைக் காண வேண்டுமென்ற துடிப்பு, வாழ்த்த விழையும் அன்பு இவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன், முளை நன்றாக இருந்தால் விளையும் பயிர் செழிக்குமல்லவா?

இனி, என் பாட்டுக்கு வழிகாட்டியாக அமைந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தம் மருமகன் (வசந்தாவுக்குக் கணவர்) மா.தண்டபாணி அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, என் கவிதைகள் பற்றிக்கூறிய மொழிகளைத் தண்ட பாணி அவர்களே தருகிறார்கள்.

'புரட்சிக் கவிஞருடனேயே தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் நிழலாக இருந்த என்னிடம் பாவேந்தர், பலரைப்