பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

தொழிலுலகு கவிஞரின் தனியுலகு. மூச்சடக்கி முத்தெடுப் பவனுக்கு மூச்சிருக்க வழியில்லை; தங்கத்தைக் கொடுப்ப வனின் அங்கத்தில் ஒன்றுமில்லை என்று கூறுவதில் வேதனைக் குரலையும் உள்ளக் கனலையும் அறிய முடிகிறது.

தொழிலாளி தொடக்கூடாச் சாதி யென்றால் அத்தகைய உலகம் தொலைக என மொழிந்து, வேற்று நாட்டில் கூலிகளாய்ப் பாடுபடும் பாழ்நிலையைப் போக்கக் களங்காண வேண்டாமோ? ஏனின்னும் பாழுறக்கம்? என்று கேட்டு விழிப்புணர்ச்சி ஊட்டுகிறார்.

முடியரசன் கவிதைகள் 'தமிழ்க்கனல்' என்று கூறலாம். முடியரசன் என்ற பெயரோடு ஒப்பிட்டுக் கூறுவதானால் பாண்டியன் 'அறிவுடை நம்பி' என்றே கூறலாம்.

சென்னைமயிலை சிவ.முத்து

15-9-1954தலைவர்.தமிழாசிரியர் கழகம்,

'சமுதாய நலனையும் தமிழ் வளர்ச்சியையும் அடிப் படையாகக் கொண்ட பாடல்களே உள்ளத்தைக் கவர்கின்றன. இத்துறையில் நீங்கள் ஆழமாகப் படிந்திருக்கிறீர்கள்.

உயர்ந்த கருத்துகள் - சிறந்த தமிழ் நடை இலக்கண வரம்பு இம்மூன்றும் உங்கள் கவிதைகளை மிக உயர்த்திக் காட்டுகின்றன.

திரு ஒளவை.சு.அவர்களும் பிற தமிழாசிரியர்களும் (எங்கள் கல்லூரியில்') உங்களை உளமாரப் போற்றுகின்றனர்.

தியாகராசர் கல்லூரிமா.இராசமாணிக்கனார்

மதுரை - 16-8-1954தமிழ்த்துறைத்தலைவர்.

'தங்களுடைய கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பகுதியைப் படிக்கும் பேறு கிட்டியது சுருக்கமாகச் சொல்லின், இக்கவிதைத் தொகுப்பு ஓர் பூக்காடு, இதிலே சிரித்துக் குலுங்கும் கவிதைகள் யாவும், நறுமணம் வீசும் வண்ண மலர்கள்.