பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 171 |
உள்ளத்திற்கு இனிப்பு உடலுக்குத் தென்பு - அறிவுக் கத்திக்குச் சாணை எல்லா வுணர்ச்சிகளையும் ஒரே சமயத்தில் பெற முடிகிறது, இக்கவிதைகளைப் பருகி' அறந்தாங்கிஅ.வேதாசலம் 29-12-1955அஞ்சல் நிலையம். "நான் வகுப்பில் நுழைந்ததும் மாணவர்கள், ஐயா, 'அன்புள்ள பாண்டியனுக்கு' நடத்துங்கள் என்று குரல் கொடுக்கிறார்கள். காரணம் ஒவ்வொரு கட்டுரையும் தேன் போன்று சுவை தருகிற தன்மைதான். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொன்றை விஞ்சுகிறது. உதாரணமாகக் கூறவேண்டுமானால் திருவள்ளுவர் தம் கருத்தை எப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒன்றை யொன்று விஞ்சுகிறாற் போல எழுதியுள்ளாரோ அதுபோல" ஐயா, நான் ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும் போதும் அதை நடத்தும் போதும் என் உடல் புல்லரிக்கிறது. அதிலும் 'தாய் மொழி பேண் என்னும் கட்டுரை என் நெஞ்சத்தைத் தொட்டு விட்டது' கீழப்பெருமறை (தஞ்சை)பெ.நமசிவாயம் 30.1.1971.ஆசிரியர். 'பாரதி யுகத்துக் கவிஞர்களிலே ஒரு குறிபிட்ட சிறப்பான இடம் தங்களுக்கு உண்டு' சென்னை நா.பார்த்தசாரதி 16-12-64 கல்கி. |