| பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 175 |
வெறும் அரசியல் விளம்பரங்களை வைத்துக் கொண்டு திரைப்பட உலகைக் கவரவில்லை. திரைப்படக் கவர்ச்சியைக் கொண்டு அரசியல் உலகை ஏமாற்றிக் கொண்டிருக்க வில்லை. அவர்கள் கொள்கையிழந்து அரசியல் பண்ணத்தெரியாத வர்கள். ஒரு கவிஞன் எதை எதைப் பாடுகிறான் என்பதனால் பெருமை பெறுவதை விட, எதை எதைப் பாடாமல் பிடிவாதமாக இருக்கிறான் என்பதனாலும் நிலையான பெருமை பெறுவான். அதிலே அவனுடைய கம்பீரமும் தெரியும். புரட்சிக் கவிஞருக்கும் கவிஞர் முடியர சனுக்கும் கவிஞர் சுரதாவுக்கும் கவிஞர் பொன்னி வளவனுக்கும் அத்தகைய நிலைத்த பெருமையும் கம்பீரமும் உண்டு. அவர்கள் தங்கள் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டவர்கள் அல்லர். தமிழ்க்கவிஞன் என்றாலே கொள்கை யற்றவன் என்று தமிழர்கள் முகஞ்சுளிக்க வைக்கக் கூடிய செயலை இந்தப் பெருங் கவிஞர்கள் செய்யவில்லை. தமிழ்க் கவிஞர்களின் பெருமையை உயர்த்திக் கொண்டிருக்கும் இப்புகழ் வாய்ந்த கவிஞர்களைத் தமிழகம் வாழ்த்திக் கொண் டிருக்கிறது' 1965-ஆம் ஆண்டு, மலேசியாவில் 'தமிழ் நேசன்' இதழில் என் கவிதைகளும், 'வீரகாவியம்' என்ற என் காப்பியமும் தொடர்ந்து வெளிவந்தன. வெளிவருமுன், அவ்விதழில் என் உருவப்படத்துடன் வெளியான விளம்பரம் அப்படியே கீழே தரப்படுகிறது. பாரதி தாசன் வழித்தோன்றல் கவிஞர் முடியரசன் தீட்டும் தீஞ்சுவைக் கவிதைகள் அடுத்த வாரம் முதல் வெளிவரும் |