| 176 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
கவிஞரைப் பற்றி *'பொன்னி' பத்திரிகையில் இடம் பெற்ற பாரதி தாசன் பரம்பரையில் அறிமுகமானவர். *திராவிடக் கவிஞர் அணியில் தனிப்பெரும் புகழுடன் திகழ்பவர். *தமிழகத்து ஏடுகளில் எண்ணிறந்த கவிதைகளைப் பாடிக்குவித்தவர் *முத்தமிழ் நாட்டின் தமிழ் வித்தகர்கள் ஒருங்கே போற்றிப் புகழும் பேறு பெற்றவர் *தமிழன்னைக்கு இதுவரை இவர் சூட்டியுள்ள பாமாலைகள்- 1.முடியரசன் கவிதைகள், 2. காவியப்பாவை, 3.கவியரங்கில் முடியரசன் 4. பூங்கொடி. *கடந்த 17 ஆண்டுகளாகத் தமிழாசிரியப் பணி புரிந்து வரும் இவரின் கவிதைகள், காரைக்குடிக் கம்பன் திருநாளில் ஆண்டு தோறும் முதலிடம் பெறுவது வழக்கம். அடுத்த வாரம் ஞாயிறு பதிப்பு கவிஞரின் கவிதைச் சோலை. இனிப் பாடலாற் பாராட்டப் பெற்ற பகுதிகளிற் சில காண்போம்: 'மூன்றாண்டு கட்குமுனம் தங்க ளோடு முடங்கலினால் அடிக்கடிநான் தொடர்பு கொண்டேன்; ஆண்டபுகழ் முடிவேந்தர் மூவர் தம்மை அறிந்ததுண்டு வரலாற்றில்; அவரே இங்கு மீண்டுவந்து கவிபாடும் ஆற்றல் பெற்ற மேன்மைதனை நின்பாக்கள் வாயி லாக ஈண்டறிந்த நாள்முதலா அரசே நின்றன் அடியொற்றி யான்பாடும் ஆவல் கொண்டேன்'. த.மனோகரன், பசுபதி பாளையம் - 18.5.73 |