பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்177

என் கண்ணிற் படலம் படர்ந்திருந்த பொழுது மனம் உருகித்தம் அன்புப் பெருக்கை வெளிப்படுத்திக் 'காவியப் பாவை' யென்னும் கவிதையேட்டின் ஆசிரியர் புலவர் கபிலவாணன் விடுத்த பாடல் களிற் சில:

மாசிலாப் பிளாட்டி னம்நீ
   மறக்கமுடி யாத வன்நீ
கூசிடும் வெளிச்சம் நின்றன்
   குளிர்தமிழ்ப் பாட்டு: வைரம்
தூசியால் போர்த்தப் பட்டால்
   தூக்கியார் எறிவார் ஐயா?
பூசிடும் சந்த னம்மே
   போற்றினேன் வணக்கம் ஏற்பீர்.

முடியரசன் என்னும் பாட்டு
   முழக்கமே, குடித்து விட்டா
வடிக்கிறீர் கவிதைத் தேனை?
   வழுக்கிநீர் விழுந்த துண்டா?
நொடியேனும் கொள்கை மாறி
   நுண்ணறி விழந்த துண்டா?
கொடிநிகர் ஒழுக்கத் திற்குக்
   கொழுநரே வருந்த வேண்டா:

கண்ணிலோர் வளர்ச்சி என்று(எ)ன்
   கண்களைக் குளமாய்ச் செய்தீர்:
புண்ணுக்கு மருந்துண் டண்ணா
   பொன்உங்கள் நெஞ்சக் குன்றம்!
எண்ணத்தில் படைத்துத் தந்த
   இலக்கிய மணியி லெல்லாம்
புண்ணுண்டா? புலமைக் கண்ணில்
   புரையுண்டா வருந்த வேண்டா

பாவையின் மூச்சி ருந்தால்
   பாவைத்த பெரியோய் நின்றன்