| பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 179 |
அழகின் சிரிப்பை அமுதத் தமிழில் பழகுதமிழ்ச் சொல்லால் பகர்ந்தான் - விழையுமன்பன் எங்கள் முடியரசன் ஏத்துங் கவியரசாய் மங்களமாய் வாழ்க மகிழ்ந்து அன்பு. கருணையானந்தா, 23.1.51 என்றும் பழகற் கினியான் எனதுள்ளத் தென்றும் குடிகொண் டினிதுறைவான் - என்றுமெனைத் தன்மனத்தே வைத்தளிப்பான் தக்க துரைராச மன்னனிவன் வாழ்க மகிழ்ந்து வா.கி.ஸ்ரீநிவாஸன் முகவை. என் ‘பூங்கொடி’ பால் மனத்தைப் பறி கொடுத்த நற்றமிழன்பர் அறிவுமணியென்பார் விடுத்த அறுபது வரிப் பாடலிற் சில வரிகள்: பூங்கொடி யென்னும் பொலிவுறு பாவியம் பாங்குற அருளிய உயர்முடி யரசே! யாங்ஙனம் நும்மைப் பரவுதல் என்றே ஈங்கு யானும் மிகவிழிக் கின்றேன்; தமிழ்த்தாய் புரிந்த தவத்தி னாலோ தமிழ்நாட் டவரின் நற்பேற் றாலோ தமிழ்மொழிக் கென்றே தனித்த பாவியம் அமிழ்தினும் இனிதாய் அருளினீர் நீரே! எடுத்தேன் பூங்கொடி யாளைக் கையில் விடுத்தேன் அல்லேன் இறுதி வரையில் முடித்தேன் என்னும் அளவும், அவள்பால் குடித்தேன் தமிழாம் உயர்பால் விருப்பால்! |