பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

எப்படித் தான்யான் என்சிறு நாவால்
செப்பிடு வேனோ சீர்பூங் கொடியின்
ஒப்பிலாத் தமிழ்மொழித் தொண்டினை? ஓ! ஓ!
இப்பார் தனில்இலை இதற்கிணை யாதுமே!
..................................
நெஞ்சை யள்ளும் சிலப்பதி காரம்
விஞ்சு புகழினைப் பெற்றது போல
கொஞ்சு பூங்கொடி யாளும் உலகில்
மிஞ்சு புகழினை மேவுதல் வேண்டும்
..................................

அரிசிப் பாளையம் அ.அறிவுமணி
சேலம் - 19-9-69செயலர் - முத்தமிழ் மன்றம்.

‘தாங்கள் யாத்த பூங்கொடி நங்கையை
மாங்குயில் கூவிடும் மதுரையிற் கண்டனம்:
துறவறம் பூண்ட தூயோள் அவளை
நறவெனச் சுவைத்தே நன்மகிழ் வுற்றனம்:
தமிழினைக் கற்கத் தழைத்த பூங்கொடி
தமிழினைக் காக்க அமிழ்தென வந்தாள்:
சீத்தலைச் சாத்தன் திகழுற மீண்டும்
நாத்திறங் கொண்டே நாடினன் கொல்லோ!
பூங்கொடி வாசம், பொன்மலர் நாற்றம்
தாங்கிய தென்னத் தகைமை சான்றது!
..................................

பண்ணைக்காடுபுலவர் சண்முகம்
24-1-75ஆசிரியர்

அன்புப் புலவர் அழகு முடியரசன்
என்றும் தமிழென் உயிரென்போன் - நன்றே