பக்கம் எண் :

196கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

சாகித்திய அக்காதெமி வெளியிட்ட ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் மு.வரதராசனாரின் குறிப்பு:

‘முடியரசன் என்னும் கவிஞர், புலவர் மரபை ஒட்டிப் பாடல்கள் இயற்றியுள்ளார். தமிழ் உணர்ச்சி அவருடைய கவிதைகளில் மேலோங்கி நிற்கும்.’

- தமிழ் இலக்கிய வரலாறு பக்.343

பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, சாகித்திய அகாதெமியால் வெளியிடப் பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் எழுதியுள்ளபகுதி கிடைத்திலது. ‘தமிழ்க்கல்ச்சர்’ என்ற ஆங்கில ஏட்டில் தனிநாயக அடிகளார் எழுதியதும். செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதர் எழுதியதும் கைக்குக் கிடைத்தில.

முனைவர் மு.தமிழ்க்குடிமகன் எழுதிய ‘பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள்’ என்னும் நூலில் ‘வரலாற்றுப் பெயர்களை மட்டுந் தாங்கி, முற்றிலும் கற்பனைப் புனைவுகளையே கொண்டு பெரு மிதச் சுவை மிளிருமாறு விளங்குகின்ற காப்பியம் வீரகாவியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘வாழையடி வாழை’ என்னும் நூலில் முனைவர் சி.பால சுப்பிர மணியம் எழுதிய பகுதியிற் சில வரிகள்:

‘கவிஞர் முடியரசன் தரமான கவிதைகளைத் தமிழ்க் கவிதை யுலகிற்குத் தருபவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பயின்றவர். மென்மையான மனமும் அதில், நுண்மையான கருத்துக்களும் கொண்டவர். ஆழ்ந்த உணர்ச்சி களை அடிமனத்தில் தேக்கி நிறுத்திப் பின்னர் அவ்வுணர்ச்சி
களை நினைவிற்குக் கொண்டு வந்து, கவிதைவடிக்கும் கலை கைவரப் பெற்றவர்.

பழமையைப் போற்றும் உள்ளமும், தமிழை வணங்கும் தனிக் கொள்கையும் சமுதாயச் சீர்திருத்தத்திலே ஆர்வமும் கொண்டவர் கவிஞர் முடியரசன் ஆவர். பாரதியையும்,