204 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
மானவுணர்ச்சி, சாதி ஒருமை, கலப்பு மணம் ஆகியவற்றைக் கவிஞர் வலியுறுத்துகின்றார். உள்ளத்தை அள்ளும் இக்காப் பியத்தில் ஒன்றிரண்டு பெருங்குறைகளும் காணப்படுகின்றன. பிற மொழிகளைக் குறை கூறுவதாகவும் உள்ளது. காலப் போக்குக்கும் நாட்டு நடப்புக்கும் இவை ஒவ்வாதன' - வி.ரெங்கராஜன் 'முத்தாரம்' என்ற ஏடு 1-5-68இல் எழுதிய மதிப்புரைப் பகுதி: மணிமேகலையின் வாழ்க்கையினை மனத்திற் கொண்டு அவளைப் போலவே ஒரு காவிய நாயகியைப் படைத்து வெற்றி கண்டிருக்கிறார் கவிஞர் முடியரசன். இப்பூங்கொடி வாயிலாகக் கவிஞர் முடியரசன் 'தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் நூல்களான தொல்காப்பியம் திருக்குறள் போன்ற நூல்களின் சிறப்பைப் பூங்கொடி வாயிலாக எடுத்து விளக்கியிருப்பதின் மூலம் பூங்கொடிக் காப்பியத்தையும் அழியாத இலக்கிய வரிசையில் சேர்த்து விட்டார். கவிஞர் தம் காவிய நாயகியைத் தமிழுக்குத் தொண்டாற்ற வைத்துத் தமிழகத்தின் மொழிப்பற்றுடையார் மாநாட்டினைக் கூட்டி, அறப்போர் தொடுத்து, அதன் காரணத்தால் சிறை சென்று, வாடி அல்லற்பட்டுச் சிறையில் உயிர்துறக்கச் செய்திருப்பது படிப்போர் விழிகளிலிருந்து அருவியை வரவழைக்கிறது. காவிய நயத்துடனும் கவிதை மணத்துடனும் அமைந்துள்ள இந்நூல் முடியரசனைக் கவியரசனாக்குகிறது. ஒருமுறை படித்து முடித்த பிறகு எழுதப் பட்டிருக்கும் நயத்துக்காக - சொல்ல ழகிற்காக இன்னொரு முறைபடிக்க வேண்டுமெனத் தோன்று கிறது.' 'தினமணி' நாளேடு 26-10-85இல் தந்தமதிப்புரை: |