பக்கம் எண் :

206கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

'சுதேசமித்திரன்' ஏட்டில் 16-6-65இல் வெளிவந்த மதிப்புரையின் ஒருபகுதி:

'இது ஒரு புதுமைக் கதை, மொழி வளர்ப்பிற்கென்றே ஒரு தனிக்காப்பியம் இயற்ற வேண்டும் என்ற ஆசிரியரின் ஆர்வத்தில் உரம் பெற்று விளைந்திருக்கின்றது இது. தமிழ்த் தெய்வ வணக்கத்துடன் தொடங்கித் தமிழணங்கின் உணர்ச்சி மொழி யுடனும் 'விடுதலை' மொழிகளுடனும் முடிவு பெறுகின்றது இந்நூல்.

புதுமை வழிகளிற் செல்லாது, பண்டைத் தமிழ் மரபை ஒட்டி அமைந்திருக்கும் இந்நூலும் இன்றைய தமிழுக்கு ஒரு நல்ல அணிதான்'

-பி.ஸ்ரீ

'தமிழ்ப் பாவை' என்னும் ஏட்டில் 17-1-65 வெளிவந்த மதிப்பு ரையிற் சில பகுதிகள்:

'தமிழைக் காக்க அறப்போர் புரிவோரும் சிறைப்படு வோரும் உயிர் தருவோரும் பலராவர். இவர்களனை
வரையும் நினைப் பூட்டி இப்பணிகள் அனைத்தையும் ஒன்றுபடுத்திப் பூங்கொடி என்ற பெண்ணாக உருவகித்து, இவ்விருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுக் காப்பியமாக மொழி காக்கும் மொழிக் காப்பியமாகத் தந்துள்ளார் கவிஞர் முடியரசன்.

இத்தமிழ்ப் பூங்கொடி காற்றோடு கலந்தாள்; நீரோடிணைந் தாள்;நெருப்பில் நீறானாள்: தாய் நாட்டு மண்ணிற் புதை யுண்டாள்; தமிழ் ஒளி தவழும் நீலவான் ஆனாள். அக்கோல மாமயில் தமிழர் தம் நெஞ்சமெல்லாம். நடமாடும் நாளே நன்னாளாகும் இம் மலர்க் கொடியாள் உள்ளமெல்லாம் வேரூன்றி, உரை யெல்லாம் கொடியோடிச் செயலெல்லாம் மணம் பரப்பும் செந்தமிழ்த் திருநாள் வருவதாகுக! சித்திரத்தில் பார்ப்போம் சிலை செய்து கும்பிடுவோம். புத்தகத்தில் என்றென்றும் போற்றிப் படித்திடு வோம் என்னும் படியாகத் திகழும் இப்பூங்கொடிப் பெண்ணாள் தமிழர் தம் உள்ளமெல்லாம் இல்லமெல்லாம் இடம் பெறு வாளாக.