பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 209 |
காளையும் கன்னியும் முதலிரவில் கூடுகின்றனர். அதனை ஆசிரியர்.' 'நூலறியார் கலிநுகரப் புகுதல் போல நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார்' - என்ற நயமான நுட்பமான உவமையால் உணர்த்து கின்றார். இந்நூல் மிக விரைவான, தெளிவான நடையோடு உணர்ச்சிச் சுழியிட்டு ஓடுகின்றது. கவியுலக வரலாற்றுப் பொன்னேட்டில் தனது வெற்றிச் சுவட்டினைத் தெளிவாகப் பதித்துள்ளவர்தான் முடியரசன். என்றாலும் இந்நூல் அச்சுவட்டினை இன்னும் அழுத்தமாகப் பதித்துள்ளது' - புலவர் பொன்னரசன். |