பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 23 |
ஏழெட்டு அகவை யானவுடன், ஊரின் மேற்கே உள்ள பெரிய குளம் என்ற பெயருடைய குளத்துப்பக்கம் தோழர் களுடன் மாலை வேளையில் விளையாடச் செல்வேன். உயர மான குளக்கரையில் அமர்ந்த வண்ணம், குளத்தையொட்டி யிருக்கிற கரடுகளையும் கரடுகளுக்குப்பின் தொடர்ந்திருக்கும் மலைகளையும் அம்மலை களின் பின், கதிரவன் மெல்ல மெல்ல மறைவதையும் சிவந்து தோன்றும் வான்வெளியையும் பார்த்துக் கொண்டேயிருப்பேன். அப்பார்வை என் உள்ளத்தில் ஏதோ ஓரின்பவுணர்ச்சியை வளர்த்துக் கொண்டிருந்தது. அக்குளத்தில் மீன்கள் துள்ளித் துள்ளிக்குதிக்கும் போது என் உள்ளமும் குதித்துக் குதித்து ஆடுவது போன்ற ஓர் உணர்வு தோன்றும். வலப்பக்கத்தில் குரங்குகள், பள்ளிக் குழந்தைகள் விளையாடுவது போல விளையாடும். மேயச் சென்ற பசுக் கூட்டம், கழுத்திற் கட்டிய மணியோசையுடன் வரிசை வரிசை யாகப் பக்கத்து நெடுஞ்சாiல் அணிவகுத்துச் செல்லுங் காட்சி, குளக் கரையில் அமர்ந்திருக்கும் என் கண்களுக்குப் பெருவிருந்தாகும். ஏனைய நண்பர்கள் ஓடியாடி விளையாடும் பொழுது நான் மட்டும் தனித்திருந்து, இவ்வெழிற்கோலங் களைக் காண்பதில் இனம் புரியாத ஓர் இன்பம் எனக்குத் தோன்றுவதுண்டு. அச்சவுணர்வு இவ்வாறு அடிக்கடி நீண்ட நேரம் விளையாடச் சென்று விடுவதால், என் பாட்டி, மாமா தேடித் தேடி அலைவார்கள். பல முறை கண்டித்துப் பார்த்தும் பயனில்லை. என் மாமா சில கற்பனைக் கதைகளைக் கட்டி விடுவார். ‘அங்கே ஒரு பிள்ளையைத் திருடன் பிடித்துக் கொண்டு போய் விட்டான்; இங்கே ஒரு பிள்ளையின் நகைகளைக் கழற்றிக் கொண்டு, கொன்று கற்றாழையில் போட்டு விட்டான்’ என்று கூறி எனக்கு அச்சவுணர்ச்சியை ஊட்டுவார். பிள்ளைப் பருவத்தில் ஊட்டிய இவ்வுணர்வு நன்கு வேரூன்றி விட்டது. இன்றும் அச்சவுணர்வு என் மனத்தில் நிழலாடிக் கொண்டே இருப்பதற்குக் காரணம் அதுதான். கவிதையுணர்வு என் மாமனுக்குத் திருமணமாகி, மக்கள் இருவர்க்குத் தந்தையான பின்னரும் என்னிடத்தில் தான் பேரன்பு செலுத்துவார். எங்குச் |