| 24 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
செல்லினும் என்னையே அழைத்துச் செல்லுவார். வைகறையில் எழுந்துவிடுவது அவர் வழக்கம் ஊரின் எல்லைப் புறத்தே சென்று, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, ஆற்றில் வந்து நீராடி விட்டு வருவார். என்னையும் உடன் அழைத்துச் சென்று அப்படியே பயிற்றுவார். செல்லும் பொழுது பற்பல அறவுரைகள் சொல்லிக் கொண்டே செல்வார். புலருமுன் எழுந்த அவர், என்னையும் துயில் எழுப்பி அருகில் அமர்த்திப் பாடல்கள் பாடி என்னையும் பாடச் சொல்வார். அவர் இரண்டாம் வகுப்பு வரைதான் படித்தார். குடும்ப நிலை கருதி இளமையிலேயே பாத்திரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். எனினும் இலக்கண இலக்கியங்களைத் தாமே பயின்று பாடல் எழுதும் ஆற்றலும் பெற்றார். பெரிதும் இசைப் பாடல்களே புனைவார். குரலும் இனிமையாக இருக்கும். அடிக்கடி என்னிடம் அவரியற்றிய பாடல்களைப் பாடிப் பாடிக் காட்டுவார். அதனோட மையாது, ‘ஆறுமுகா, வேலவா வாவா, ஆறு படை வீடுடையாய் வாவா’ என்று பாடி, ஆறுமுகா, ஆறுபடை என்னும் இரண்டு சொல்லிலும் முதலெழுத்து ‘ஆ’ என வந்திருப்பது மோனை என்று சொல்லுவார். இரண்டாம் எழுத்து ‘று’ என்று வந்திருப்பது எதுகை என்று சொல்லு வார். ‘வேல் முருகா’ என முதலில் அமைந்தால் அடுத்து ‘மால் மருகா’ என அமைத்தல் வேண்டும்; முருகா மருகா என்று சொல்லும் பொழுது அழகாக இருக்கிற தல்லவா?’ என்று விளக்குவார். எனக்கு ஒன்றுமே விளங்குவதில்லை. ஆனால் கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் சொல்லிக் கொண்டேயிருப்பார். மேலும் அடிக்க இராமாயணம், பாரதம் போன்ற நூல்களிலிருந்து பாடல்களைப் பாடிப் பாடி விளக்குவார். ‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’ என்னும் பாடல் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கோம்பை, போடிநாயக்கனூர், கம்பம் போன்ற ஊர்களிலிருந்து, கவிராயர் பலர் என் மாமனைத் தேடி வருவார்கள். அவர்களுடன் திண்ணையிலமர்ந்து இலக்கியவுரை யாடல்கள் நடத்துவார். என்னையும் அருகில் அமர்த்திக் கொண்டு தான் பேசுவார். விளங்கினும் விளங்கா விடினும் நானும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். வருவோரிடமெல்லாம் என்னைக் |