230 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
ஏதேனும் வினாக்கள் விடுப்பார். அவர்களைச் சிந்திக்குமாறு அறிவுரை கூறுவார். பெரியவர்களிடம் விளக்கம் கூறிப்பகுத் தறிவூட்டுவார்.’ ஒரு சமயம் வைகறையில் பால் வாங்கச் சென்றிருந்தார். ஓர் ஐயரும் வந்திருந்தார். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கந்தசாமி அவரை நோக்கி ‘ஆமா நம்ம ஊர்லே மாரியம்மன் திருவிழா நடக்கிறதே; அதற்கு நான் கோழி நறுக்கு வதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேண்டிக் கொண்டது கோழியா? ஆடா? என்றார். உடனே ஐயர் ‘என்னங்காணும் நான் பிராமணன்; என்னிடத்திலே இப்படிக்கேட்கிறேள்?’ என்று விடையிறுத்தார். ‘அட! எனக்குத் தெரியாதா என்ன? நீங்கள் பக்தராச்சே! அதனால் கேட்டேன்’ என்றார் கந்தசாமி. ‘எங்களவா அதெல்லாம் செய்யமாட்டா’ என்றார் ஐயர். ‘என்னங்க இது! நானும் இந்து, நீங்களும் இந்து. உங்களுக்கு ஒரு முறை; எங்களுக்கு ஒரு முறையா? நாங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளும் மாரியம்மன் நீங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டாளா?’ என்று சொன்னார் கந்தசாமி. ‘போங்காணும், உம்ம கூடப் பேசமுடியாது என்று அகன்று விட்டார் ஐயர். விறகுக் கடைக்குச் சென்றாலும் காய்கறிக் கடைக்குச் சென்றாலும் பணியிருந்தாலும் இவ்வாறே பகுத்தறிவுக் கொள்கைதான் பேசுவார். ஒருமுறை என்னுடன் உரயாடிக் கொண்டிக்கும்பொழுது ‘ஒருவன்’ சாதிப் பற்றில்லாதன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?’ என்று வினவினார். நீங்களே சொல்லுங்கள் என்று நான் மறுமொழி தந்தேன். ‘ஒருவனுடைய சாதியைமற்றவன் இகழ்ந்தோ புகழ்ந்தோ பேசும் பொழுது மனத்திற் பாதிப்பு ஏற்படாமல் இருப்பவன் எவனோ அவனே சாதிப் பற்றில்லாதவன்’ என அருமையான விளக்கம் தந்தார். சாதியொழிப்புத் துறையில் எனக்கு ஆசான் ஆனார். |