பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 229 |
இன்றும் என் வளர்ச்சியிலும் நலத்திலும் அக்கறை கொண் டிருக்கிறார் முழு உரிமையுடன் அவர்தம் இல்லத்தில் நானும் பழகி வருகிறேன். பிரிந்த சம்பந்தன் புலவர் முத்து.சம்பந்தன் என்னுடன் பணியாற்றியவர். தம்பி முறையில் பழகியவர். என் மக்களுக்கு உடல் நலமில்லை யென்றால் ‘சித்தப்பாவைக் கூப்பிடுங்கள்’ என்றுதான் அடம் பிடிப்பர். அவர் வந்த பின்புதான் மருந்து உட்செல்லும்; பத்திய உணவும் உள்ளே புகும், அந்த அளவிற்கு நெருக்கமானவர். என் எழுத்துப் பணிக்குப் பேரூதவியாக நின்றவர். இளம் பருவத்திலேயே என்னைப்புலம்ப விட்டுப் பிரிந்து விட்டார். கவிதை நூல்கள் எழுதிப் பரிசில் பெற்றவர். சோம்பலறியா வாழ்க்கையர்; அடக்கமிக்க செயலினர். ஒரு நல்லாசிரியர். குறள் கந்தசாமி காரைக்குடி அஞ்சல் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கந்தசாமி என்னும் இனிய நண்பர். இவர் என்பாற் பேரன்பும் பெருமதிப்புங் கொண்டவர். என் பெயரைச் சொல்லுதற்கே கூச்சப்படுவார். பத்து மணித்துளி இவருடன் உரையாடிக் கொண்டி ருந்தாற்போதும், பேச்சின் இடையில் நான்கைந்து குறட்பாக்களேனும் சொல்லிவிடுவார். இதனால் இவரை அஞ்சலகத்தில், குறள் கந்தசாமியென்றே அழைப்பர். தமிழார்வம் மிக்கவர்; சுயமரியாதைக் கொள்கையில் அழுத்த மான பற்றுடையவர்; எளிமையானவர்; புறக் கோலத்தைப் புறக்கணிப்பவர். அகக் கோலம் அமையப் பெற்றவர். பெரி யாரையோ, அண்ணாவையோ, கலைஞரையோ எவேரனும் குறை கூறிவிடின் எளிதில் விடார். நாட்டின் இன்றைய நிலையை நினைந்து நினைந்து உருகுவார். ‘மூலை முடுக்குகளில் நின்றுகொண்டு,சுயமரியாதைக் கொள்கை களை முழக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்; போவோர், வருவோர் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அஞ்சல் நிலையத் தலைவராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது வரும் இளைஞர்களிடம் |