246 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
கொண்டே சொல்லுக்குச் சொல் வாய்விட்டுச் சிரித்தார் கவிஞர். அப்பொழுது அவர் சூதுவாது தெரியாத ஒரு குழந்தை போலக் காட்சியளித்தார். படப்பிடிப்பு: படம் பிடிக்குங் கருவியுடன் நான் சென்றிருந்தமையால் கவிஞரையும் படம் பிடித்துக் கொள்வோம் என்று கருதி வாணி யண்ணனிடம் கூறினேன். ‘இரு இரு அவரைக் கேட்டுக் கொண்டு படம் பிடிப்போம்’ என்றார். சிறிது நேரம் சென்றது. வெளிச்சம் போவதற்கு முன் எடுத்தால்தான் உருவம் விழும், இல்லையென்றால் பயன்படாது. என்றேன். வாணியும் துணிந்து கவிஞரிடம் ஒப்புதல் கேட்டார். ஓ, நல்லாப் புடிச்சுக்கலாமே’ என்றார். நான் விரைவாகப் படக் கருவியை எடுத்தேன். ‘நில்லு நில்லு; இப்ப எடுத்துறாதே’ என்று நிறுத்திவிட்டுக் ‘கோபதி, இங்கே பாருப்பா மேசையை, புத்தகமெல்லாம் கலைஞ்சு கிடக்குது. அவுங்க என்ன நினைப்பாங்க. படத்திலே அசிங்கமாகத் தெரியுமே! இதை ஒழுங்கா அடுக்கு, நான் தலைவாரிக்கிறேன்’ என்று கூறிக் தலைவாரிக் கொள்ளச் சென்றார். அதற்குள் மேசை ஒழுங்குபடுத்தப் பட்டது. வந்து அமர்ந்தார். நிமிர்ந்து பார்த்தார் ‘ம்ம், இப்பப் புடிங்க’ என்றார். இவ்வளவும் நடந்து முடிவதற்குள் வீட்டுக்குள் வெளிச்சம் குறைந்து விட்டது. வேறு வழியின்றிப் படம் பிடித்தேன். பின்னர் விடைபெற்று மீண்டோம். சென்னைக்குச் சென்று படச்சுருளைக் கழுவிப் பார்த்தால், கவிஞர் படத்தைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்தன. பேசும் முறை நம் கவிஞர், மேடையில் பேசும் போது மேடைப் பேச்சாக இராது, தனியே ஒருவருடன் எப்படிப் பேசுவாரோ அதுபோல நடைமுறைப் பேச்சாகவே இருக்கும். ‘ஜிப்பா’ என்று சொல்லப் படுகிற முழுக்கைச் சட்டையணிந்து கொண்டு மேடையில் பேசும்போது அடிக்கடி கைகளை உயர்த்திக் கொண்டும் சட்டைக் கையைச் சுருட்டிச் சுருட்டி விட்டுக் கொண்டும் பேசுவார். பார்ப்பவர்களுக்கு கவிஞர் சண்டைக்கு வருவது போலத் |