பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 245 |
அப்பொழுதுதான் எனக்கு உண்மை புரிந்தது. திண்ணையில் அவர் அமர்ந்திருந்த தோற்றம் என் கண் முன் தெரிந்தது. கால்களை மடக்கிக் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, இடக்கையைத் திண்ணையில் ஊன்றியவாறு கவிழ்ந்த வண்ணம், அமர்ந்திருக்கிறார். விரல்கள் ‘பென்சிலை’த் தீட்டிக் கொண்டே யிருக்கின்றன. வாய் எம்முடன் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் மனம் மட்டும் இங்கில்லை. கற்பனை வானில் பறந்து கொண்டே இருந்திருக்கிறது. கவிதை உருவாகி விட்டது. உடனே உள்ளே ஓடிச் சென்று எழுதியிருக்கிறார். இப்படி நினைந்த வாறு வாணியண்ணனைப் பார்த்துச் சிரித்தேன். ‘வாத்தியார் எந்த நேரமும் இப்படித்தான்’ என்றார். ஆம், பிறவிக் கவிஞர்கள், எப்பொழுதும் தம்மை மறந்து, கற்பனையில் மிதந்து கொண்டு தானேயிருப்பர்! வந்தே மாதரம் பற்றி கோபதி, மறுபடியும் வெளியில் வந்து, ‘அப்பா கூப்பிடு கிறார்’ என்றார்; உள்ளே நுழைந்தோம். மேசைக்கருகில் அமர்ந் திருந்த கவிஞர், ‘உட்காருங்கள்’ என்று எதிரில் பலகையைக் காட்டினார். அமர்ந்தோம். அவரே மிகுதியாகப் பேசினார். அனைத்தும் நினைவிற்கு வரவில்லை; இரண்டொன்று மட்டும் நினைவில் நிற்கின்றன. அப்பொழுது திராவிடர் கழகத்திலிருந்து பேரறிஞர் அண்ணா வெளியேறிய நேரம். அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த கவிஞர். ‘இந்த அண்ணாத்துரை ஏன் வெளியேறணும்? அச்சகம், சொத்து எல்லாவற்iம் பறித்துக் கொண்டு கிழவனை வெளியேற்ற வேண்டியதுதானே! இதெல்லாம் யார் சொத்து? பொதுச் சொத்துத்தானே’ என்றார். சிறிது நேரம் பேசி விட்டு, குலுங்க குலுங்கச் சிரித்தார், ஏன் சிரிக்கிறார் என்று எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவரே சொன்னார். ‘அந்தக் காலத்திலே காங்கிரசுக்காரங்க வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று சொல்லுவாங்க, நம்ம பெரியாரு சொல்லுவாரு வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று அவுங்க சொல்றது, வந்து ஏமாத்றம் வந்துஏமாத்றம் என்று சொல்லறது போல நமக்குக் கேக்குது, அப்படின்னு பெரியார் சொல்வாரு’ என்று சொல்லிக் |