பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்287

கொண்டு என் தனிக் கருத்தை அமைக்காது அவர்தம் கருத்து களையே அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் புனைந்திருந் தேன். நல்ல வரவேற்பும் இருந்தது. கவியரங்கம் முடிந்தது. மேடையை விட்டுக் கீழே வந்துவிட்டோம்.

கருத்தரங்கு தொடங்கியது, தலைமை தாங்கிய அம்மையார், என்னைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அருகிலிருந்த பதுமாவதி சீவானந்தம் (பொதுவுடைமை இயக்கத்தலைவர் சீவானந்தம் துணைவியார்) அவர்கள், கை தட்டி கைதட்டிப் பாராட்டினார். ஒரே ஆர்ப்பாட்டம்!

எனக்கொன்றும் விளங்கவில்லை. நான் கூறியவை அனைத்தும் திரு.வி.க.வின் கருத்துகள். என்னை ஏன் தாக்க வேண்டும்? ஒருவேளை என்பாடலில் வரும் கருத்துகள் ஏதேனும் அம்மை யாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்குமோ என்று கருதிக் கொண்டேன். என் அருகிலிருந்த தலைமையாசிரியர் இளங்கோவன் (பின்னே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) பொருமிக் கொண்டேயிருந்தார்.

பேசிக்கொண்டே இருந்த அம்மையார் ‘செண்ட் மணம்’ தெரிந்திருந்தால் மட்டும் போதாது. தமிழ் மணம் அறிந்திருக்க வேண்டும்’ என்று என்னைத் தாக்கியவுடன் இளங்கோவன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மேடைக்குத் தாவினார். உடனே அவரைப் பற்றியிழுத்து அமைதிப்படுத்தினேன்.

இங்கே மற்றொரு வேடிக்கையும் நிகழ்ந்தது. இவ்விழாவை நடத்தியவர் ஒரு தமிழாசிரியர். நானும் தமிழாசிரியர். அவரும் தமிழர் நானும் தமிழன் ஆனால் அவர் திராவிடர் கழகம். நான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கழக வேறுபாட்டினால் இரவு உணவுக்கு என்னை அழைக்காது சென்று விட்டார். கொள்கையில் அவ்வளவு ‘தீவிரம்’

நெல் பெற்ற பாராட்டு

ஒருமுறை திருச்சி வானொலி நிலையத்தில், பொங்கல் கவியரங்கம் நிகழ்ந்தது. நெல் என்னும்தலைப்பிற் பாட என்னை யழைத்திருந்தனர். வேளாண்மைத்துறையில் ஈடுபட்ட ஒருவரிடம் நெல் பற்றிய குறிப்புகள் பலவற்றைக் கேட்டறிந்துகொண்டு, அந்த