பக்கம் எண் :

288கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

அடிப்படையிற் பாடல் புனைந்திருந்தேன். பாடல் பெரிதும் பாராட்டப்பட்டது. எனினும் ஒத்திகை பர்க்கும் பொழுது என் பாடலில் ‘சூரியன்’ என்ற சொல்லை எடுத்துவிட வேண்டும் என்றனர். பொங்கல் நாளில் சூரியனைச் சொல்லாமல் இருக்க முடியுமா? மற்றவர் பாடல்களில் சூரியன் வருகிறதே! அதை யெடுக்கச் சொன்னீர்களா? என்றேன்.

‘அவர்கள் சூரியன் என்று சொல்வதற்கும் நீங்கள் சூரியன் எனச் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் சொல்லும்பொழுது வேறு பொருளைத் தந்துவிடும்’ என்று வானொலியார் கூறினர் (உதயசூரியனை நினைத்துக் கொண்டு அவர்கள் அவ்வாறு கூறினர்).

சூரியன் என்றால் ஒரு பொருள்தான். அவர்கள் சூரியன் வேறு. என் சூரியன் வேறு என்றில்லை. எல்லாம் ஒரே சூரியன்தான் என்று கூறிஎடுக்க மறுத்துவிட்டேன்.

ஒரு கட்சியின் சின்னம் என்பதற்காகப் பொங்கல் திருநாளில் சூரியனை விரட்டிவிட முடியுமா? சூரியன் என்ன ஒருவர்க்கு மட்டுந் தனியுடைமையா? மாந்தர் அனைவர்க்கும் பொதுவுடை மையன்றோ? சூரியன் ஒருசிலர்க்கு மட்டும் வெளிச்சம் தருகிறதா? பிறரைப் புண்படுத்துகிறதா? நாட்டில் ‘சுதந்திரம்’ இப்படிச் சீர்கெட்டுக் கிடக்கிறது.

கவியரங்கிற்குப் பின்னர், வானொலி மாறன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. ‘நெல்’ பாடலுக்கு நூற்றுக்கணக்கான பாராட்டுக் கடிதங்கள் வந்துள்ளன என்று கூறி மகிழ்ந்தார்.

பக்திக்குக் கிடைத்த பரிசு

பிறிதொரு கால் ‘பக்தி’ என்னுந் தலைப்பிற் பாடத் திருச்சி வானொலியார் என்னையழைத்திருந்தனர். கலைஞர் தலைவர். ஒத்திகை நடந்தது ஒத்திகை முடிந்ததும் ‘இன்னும் கொஞ்சம் வேகமாகப் பாடியிருக்கலாமே?’ என்று மாறன் கூறினார். வானொலிக் கவியரங்கம் ஆதலின் அடக்கமாகப் பாடினேன் என்று நான் மறுமொழி கூறினேன்.

கவியரங்கம் தொடங்கி முடிந்தவுடன் கலைஞர், ‘இவ்வளவு வேகம் வேண்டியதில்லையே; கொஞ்சம் வேகத்தைக் குறைத்திருக் கலாம்’ என்று கூறினார்.