பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 289 |
எதிர்பாராமல் மதுரையில் மாறன் அவர்களைச் சந்தித்தேன் ‘நெல்லுக்கு வந்த கடிதங்களை விட இரண்டு மடங்கு அதிகமான கடிதங்கள் உங்கள் பக்திப் பாடலுக்கு வந்துள்ளன’ என்றார். மகிழ்ச்சியென்று நான் பெருமைப்பட்டேன். அவர் சொன்னார்:, ‘நெல்லுக்கு வந்தவை பாராட்டுக் கடிதங்கள். பக்திக்கு வந்தவை வசவுக் கடிதங்கள்’ என்றார். நெல்லுக்குப் புகழ்ச்சி! பக்திக்கு இகழ்ச்சி! நானும் ஒரு முதலாளி கருவூரில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. தலைமைப் பொறுப்பு என்னுடையது. அங்குப் பாடிய பாவலர் ஒருவர் என்னைக் குறிப்பிடும் பொழுது சீர், தளை, முதலியவற்றுக்கு முதலாளி என்று குறிப்பிட்டார். நான்அவர் பாடலைப் பாராட்டும்பொழுது இவர் பாடல்கள் என்னை மகிழ்வித்ததை விட, என்னை முதலாளி என்று விளித்தது என்னை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்திவிட்டது. பற்றாக்குறை வாழ்வில் கிடக்கும் எனக்கு முதலாளி என்ற சொல், மகிழ்வைத் தராமலிருக்குமோ? என்று நகைச்சுவைபடக் கூறினேன். இறுதியில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். ‘கவிஞர் முடியரசன் தோற்றத்தில் அண்ணாவைக். காண்கிறேன். பேச்சில் பேராசிரியர் அன்பழகனைக் காண்கிறேன்’ என என்னைப் பாராட்டி விட்டு ‘நான் உள்ளே நுழையும் போது கவிஞர் அமர்ந்திருந்த காட்சியைக் கண்டு இவர் ஒரு ‘டெக்ஸ்டைல்சு’ முதலாளியாகத் தான் இருக்க வேண்டும் என்று நானுங் கருதினேன்’ என்று முதலாளியை உறுதிப்படுத்தினார். (இன்றுங் கூட என் தோற்றத்தை வைத்துப் பலர் அப்படித்தான் கருதிக்கொண்டிருக் கின்றனர்) |