பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்297

செலுத்துவது? தனித்துப் பிறந்த எனக்கு இத்தகு பேரளுளாளர் கிடைத்தனரே என எண்ணி யெண்ணி, உவகைக் கண்ணீர் உகுப்பது தவிர என்னால் வேறென்ன செய்ய இயலும்?

என் வாழ்க்கை பற்றி நானெழுதிய பாடலைக் கீழே தந்துளேன். அதனைப் படித்தால் நான் நடந்து வந்த பயணத்தின் அருமைப் பாட்டை நன்குணர்ந்து கொள்ளலாம். எத்தகு இடையூறு நேரினும் என் கொள்கையிற் பிறழ்ந்திலேன்; பெருமிதமுங் குன்றிலேன். அந்த நிலைக்கு என்னை ஆளாக்கிய என் நெஞ்சிற் கொலுவிருக்கும் தமிழன்னைக்கு நன்றி செலுத்தி வணங்குகிறேன்.

இதோ அப் பாடல்.

உற்றவள் ஒவ்வோர் நாளில்
    உலையிட அரிசி யில்லாச்
1சொற்றனை என்பாற் சொல்லத்
    துவண்டுளஞ் சோர்ந்து செல்வேன்;
பற்றுளங் கொண்ட நண்பர்
    பரிந்துகை கொடுப்பர்; ஆனால்
உற்றெனை ஏழை யென்றால்
    உளத்தினுள் அதனை ஏலேன்

உடுத்திடும் உடைக்குக் கூட
    ஒரோவழித் தவித்த துண்டு
துடித்திடும் அற்றை நாளில்
    துணிபல தந்து துன்பம்
துடைத்துநல் லன்பு காட்டித்
    தோழர்கை கொடுத்து நிற்பர்;
நடப்பிது வெனினும் ஏழை
    என்றெனை நவில மாட்டேன்.

பிணியெனைப் பற்ற நெஞ்சம்
    பேதலித் துழலுங் காலை
தணியவே வந்து தாய்போல்
    தண்ணருள் சுரந்து காக்கும்
2 அண்ணலார் உதவ மெய்யில்