| பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 45 |
மேலும், ‘தமிழினம் நாத்திகத்தை நோக்கிச் செல்வது கண்டிக்கத் தக்கது; ‘சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளந்தெறிவ தெந்நாளோ?’ என்ற பாரதி தாசன் பாடலை மாணவர் பாடித்திரிவது வெறுக்கத்தக்கது. கடவுளைப் பிளந்தெறியச் சொல் வதும் ஒரு பாடலா? அதற்குச் செவிசாய்ப் பதும் முறையா? என்று உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். ஊர்ப் பெரியவர்களும் அங்கிருந் தனர்; இப்பேச்சை, ஆரவாரித்து வரவேற்றனர். தலைமைப் பொறுப்பேற்ற நான், அதற்கு மறுப்புரையாக விளக்கங் கூறினேன். ‘பொறாமை கொள்வது தவறு’ என்று நாரா யணசாமி குறிப்பிட்டார். நான் முழுமையாக அதை வரவேற் கிறேன். அழுக்காறு கொள்வது அறிவுடைமையாகாது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாது.இது தனி மனித வாழ்க்கைக்குப் பொருந்துமே அன்றி ஓர் இனத்தின் வாழ்க்கைக்குப் பொருந்தாது.’ என் முந்தையர் தேடி வைத்த என் வளமனையில் மனமிரங்கி ஒருவனைக் குடி புக விட்டேன். காலஞ் செல்லச் செல்ல என்னை வஞ்சித்து. அவன் அதைக் கைப்பற்றி, என் உரிமையைப் பறிக்க முயல்கிறான்; விழித்துக் கொண்ட நான், எனக்குரிய வளமனை யைப் பெற முயல்கிறேன்; இதனை அழுக்காறு என்றால் இதைவிட அறியாமை பிறிதொன்றில்லை. விழித்துக் கொண்ட தமிழினத்தை நோக்கிப் பொறாமைப்படுகிறது என்று நாராயணசாமி கூறுவதில் பொருள் இருக்கிறதா? என்று எண்ணிப் பாருங்கள் என்று நான் கூறிய கருத்தையும் அவை யோர் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஒன்றை இகழ்ந்து கூறினும் கைதட்டுவர்; புகழ்ந்து கூறினும் கைதட்டுவர் நம் மக்கள்; எண்ணிப் பார்த்து, எது சரி என உணர்ந்து, அதனை வரவேற்கும் இயல்பறியார். அடுத்து; நாத்திகப் பாடல் பற்றியும் விளக்கினேன்; ‘சீரங்க நாதனையும்’ எனத் தொடங்கும்பாடல் பாரதிதாசன் பாடலன்று என்பதை நாராயணசாமி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுளைப் பீரங்கியால் பிளந்தெறிந்து விட முடியும் என்று அஞ்சத் தேவையில்லை. கடவுளை அவ்வளவு எண்மையாகக் கருதவும் வேண்டுவதில்லை. பிறப்பால், செல்வத்தால் ஏற்றத் தாழ்வுகளைக் கடவுளர்தாம் படைக்கின்றனர் என்றால் அக்கொள் கையை உடைத் தெறிய வேண்டும் என்ற கருத்தில் பாடப்பட்டதே தவிரக் |