46 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
கடவுளை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்திற் பாடப் படவில்லை. சீரங்க நாதனும் நடராசனும் தான் கடவுள் என்று நாராயணசாமி நம்பு வாரானால், அவ்வுருவங்களை உடைக்கலாமே தவிர உண்மையான கடவுளை உடைக்க முடியாது என்று பேசிமுடித்து விட்டேன். மறுநாள், கல்லூரியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். கழுத்தில் உருத்திராக்கமணியும் உடலில் திருநீற்றுப் பூச்சும் உடைய ஒருவர் வெகுண்டு வந்து ‘ஏண்டா! சாமியைப் பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும் என்று கூறினாயாமே’ என்று பதறினார். நான் மறுமொழி தரும் வரை அவர் காத்திருக்க வில்லை. ‘உன்னைப் பீரங்கியால் பிளந்தா லென்ன?’ என்றார். முடிந்தால் முயலுங்கள் என்று கூறினேன். ‘உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று சீற்றத்துடன் வெளியேறி விட்டார். எங்கெங்கே பற்ற வைக்க வேண்டுமோ, அங்கெல்லாம் வைத்து மீண்டார். முதல் தோல்வி 1943 ஆம் ஆண்டு ‘வித்துவான்’ வகுப்புத் தேர்வு எழுதினேன். பல்கலைக் கழகத் தேர்வில் முதன்மை பெறும் மாணவர்க்குத் திருப்பனந்தாள் குமரகுருபரர் பெயரால் அமைந்த திருமடத்துச் சார்பில் ஆயிரம் வெண்பொன் பரிசிலாகப் பல்கலைக் கழகம் தந்து வருகிறது. அப்பரிசில் எனக்குக் கிடைக்கும் என்று என் ஆசிரியப் பெருமக்களும் கல்லூரி நடத்துவோரும் நம்பிக் கொண்டிருந்தனர். தேர்வு முடிவுகள் வெளி வந்தன. தேடித் தேடிப் பார்த்தும் என் எண் காணப்படவில்லை. என் எண் மட்டும் அன்று, என் தோழர் கு. கந்தசாமி எண்ணும் காண வில்லை. என் தன்மான இயக்கவுணர்க்குக் கிடைத்த முதல் தோல்வி! பல்கலைக்கழகத்திற் செல்வாக்கு மிக்க பெரியவர் களிடம் ‘சீரங்கநாதனும் தில்லை நடராசனும்’ சென்று சேர்ந்தமையால் நேர்ந்த விளைவு இதுவென என் ஆசிரியர் மீ.முத்துசாமிப்புலவர் கூறக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தோல்வியால் மனந்துவண்டு விடவில்லை. நாடகத்துறை கலைத்துறையில் ஆர்வம் மிகுந்திருந்தமையால், எம்.கே. தியாகராச பாகவதர், கலைவாணர், தி.க. சண்முகம், நவாப் |