பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 47 |
இராசமாணிக்கம் போன்றவர்களுக்கு மடல் எழுதினேன். பாகவதரி டமிருந்து மறுமொழியே வரவில்லை ஏனையோரிட மிருந்து மடல்கள் வந்தன. அவற்றைக் கீழே அப்படியே தருகிறேன். மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா டி.கெ. ஷண்முகம்இடம் : ஈரோடு தேதி : 7.2.44 அன்புடையீர், வணக்கம் தங்கள் 4.2.44 இலிகிதம் கிடைத்தது. விரிவான மறுமொழி விடுக்க நேரமில்லை. இன்றைய நிலையில் நாடகத்துறையில் தங்களைப் போன் றோர் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்லவென்பதே சுருக்கமான மறுமொழி. அன்பு டி.கெ.ஷண்முகம் Asoka Films N.S. Krishnan Coimbator 9.2.1944 Dear Duraj Raj தங்கள் 4 தேதிய கடிதம் கிடைத்தது. நிற்க; தற்சமயம் நாங்கள் படம் எடுக்கும் தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் இல்லை. ஆகையால் எங்களிடம் முயற்சி செய்வதைவிட வேறு எந்தத் தொழிலுக்காவது முயற்சி எடுத்து வெற்றி பெறவும். எங்களிடம் வேலையில்லாமைக்கு வருந்துகிறேன். இப்படிக்கு M. Thiruvengadam. |