50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
எல்லாவுரிமைகளும் உங்களுக்கு வழங்கி விட்டார்’ என்று துரைசாமி கூறினார். மிகப்பெரிய வீடு, அலுவலகம் அங்கேதான். நடிகர்கள் தங்குதல், உணவு கொள்ளுதல், நீராடுதல்,நடிப்பு ஒத்திகை பார்த்தல் எல்லாம் அங்கேதான். அவ்வளவு பெரியவீடு வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். எனக்கும் அனைத்தும் அங்கே தான். வைகறையில் எழுதல், தலை நிறைய எண்ணெய் வைத்துக் கொண்டு நீராடல், தேவியை வணங்குதல், உண்ணல், இரவில் நாடகத்துக்குச் செல்லுதல் இவை நாடோறும் நடைபெறும் பழக்கம். எனக்கு மட்டும் வாத்தியார் அறையில் வழிபடும் உரிமையளிக்கப்பட்டது. ஏசு நாதர் நாடகம் அப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு நடித்துக் கொண்டிருந்த எம்.என். கண்ணப்பா (திரைப்பட நடிகர்), வெள்ளைச்சாமி என்பவர். கைகேயியாக நடித்தவர் (பெயர் நினைவில்லை) இம்மூவரும் என்னுடன் பகற்பொழுதில் உரையாடி மகிழ்வர். கண்ணப்பா ‘ஐயா! ஐயா!’ என்று அழைப்பதே இனிமையாக இருக்கும். நல்ல தமிழில் பேச அளவுகடந்த ஆர்வம் காட்டுவார். அவர் பேச்சில் இனிமை, அழகு, பணிவு அனைத்தும் தாண்டவ மாடும். அருமையான நடிகர். வெள்ளைச்சாமி எனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தார். அன்னையை வீட்டுப் பிரிந்த துயர் என் அடிமனத்தில் வருத்திக் கொண்டேயிருந்தது. அளவிற் பெரிய செவ்வரிசி தான் அப்பொழுது அங்கு கிடைக்கும். அதனாலான சோறு எனக்கு ஒத்துக் கொள்ள வில்லை; வலிந்து மேற்கொண்ட தேவி வழிபாடு வேறு எனக்குக் குழப்பத்தையுண்டாக்கியது. பத்து நாள்வரை அங்கிருந்தேன். அன்னையாரின் நினைவு, செஞ்சோறு, வழிபாடு அனைத்தும் சேர்ந்த என்னைப் பிடர்பிடித்துத் தள்ளின. துரைசாமி எவ்வளவோ சொல்லியும் மேலைச்சிவபுரிக்கு வந்து விட்டேன். மயிலம் தமிழ்க்கல்லூரி பின்னர் எப்படியும் ‘வித்துவான்’ வகுப்புத் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும் என்று எண்ணி, மயிலம் தமிழ்க் கல்லூரிக்குச் சென்றேன். துரைசாமி ஐயர் முதல்வராக இருந்தார். அடிகளாசிரியர், சிவலிங்கனார் போன்ற பெருமக்கள் விரிவுரை யாளர்களாக விளங் கினர். சில நாள் பாடங்கேட்டேன். மாணவர்க்கு அடிகளார் இருக்கும் |