பக்கம் எண் :

6கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

'பாவேந்தர் விருது' (1987 க்குரியது) பொற்பதக்கம்,- கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு சென்னை - 1989

'பொற்கிழி' - விக்கிரமன், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993

'சிறந்த தமிழ்த் தொண்டிற்கான' அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில், வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ. 50,000/அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993.

'இராணா இலக்கிய விருது' பொற்குவை ரூ.10,000/- 'இரண்டாம் புரட்சிக் கவிஞர்' எனும் பட்டம் தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994

'கல்வி உலகக் கவியரசு' விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் - 1996

'பொற்கிழி' - பழைய மாணவர் பாராட்டு விழா. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச் சிவபுரி - 1997

'கலைமாமணி' விருது, 'பொற்பதக்கம்' - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர் - கலைஞர் மு. கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998.

பிறகுறிப்புகள்

இளம்பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.

20 ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள் இயற்றினார். அவை கிடைத்தில (1939)

21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி,நாடு, இயற்கை இவற்றையே பாடி வந்தார் (1940)

21ஆம் அகவையில் இயற்றிய 'சாதி என்பது நமக்கு ஏனோ?' என்ற கவிதையே முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் 'திராவிட நாடு' இதழில் வெளியிடப்பட்டது (1940)