பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 63 |
மூன்று முறை பொறுத்துப் பார்த்த திருஞான சம்பந்தர் வெகுண் டெழுந்தார். ‘நீ கல்வியமைச்சராக இருக்கத் தகுதியற்றவன்; உன் வயதென்ன? என் வயதென்ன? வயதுக்குக் கூட மதிப் பளிக்கத் தெரியாமல் என்னை ‘நீ’ யென்று ஒருமையிற் பேசு கிறாயே? நீ ஒரு அமைச்சனா?’ என்று பொரிந்து தள்ளி விட்டார். கூட்டத்தில் அச்சமும் அமைதியும் நிலவியது. என்ன நடக்குமோ? என்றஞ்சினோம். அங்கேதான் அவினாசிலிங்கனார் தமது பெருந்தன்மையைக் காட்டி நின்றார். ‘மன்னித்துக் கொள்ளுங்கள்; நான் அமைச்சன் என்ற முறையிலோ, உங்களைக் குறைத்து மதிப்பிட்டோ பேசவில்லை, பேச்சுவாக்கில் பேசி விட்டேன். உங்கள் மனத்தைப் புண்படுத் தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று அமைச்சர், கூறியவுடன் அனைவரும் உருகிவிட்டோம். பிற அமைச்சராக இருப்பின், காவலரை அழைத்து, ‘இவனைக் கட்டி வைத்துத் தோலை உரியுங்கள்; செத்து விட்டால் தற்கொலை என்று சொல்லி விடுங்கள்’ என ஆணையிட்டிருப்பர். இவர் பண்பாள ராதலின் மன்னிப்புக் கேட்டார். மாலையில் வழக்கம் போல விடுதலை அலுவலகம் சென்றோம். அரங்கண்ணல், தவமணி ராசன் இருவரும் அப்பொழுது அங்குப் பணியில் இருந்தனர். ஐயா வரப் போவதாக யாரோ வந்து சொன்னதும் விரைந்தெழுந்து அங்கங்கே கிடந்த வெட்டுத் துண்டுக் காகிதங்களைப் பொறுக்கி யெடுத்து வைத்தார்கள். பயன்படாத இவற்றை ஏன் ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கி வைக்கிறீர்கள்? என்றோம். ‘ஐயா வந்தால் இப்படி வீணடிக் கிறீர்களே யென்று திட்டுவார்’ என்று கூறினர். வெட்டுத்துண்டு தானே எதற்குப் பயன்படப்போகிறது? என்றேன். ‘மாநாட்டு நுழைவுச் சீட்டு அச்சடிக்க ஐயா பயன் படுத்துவார்’ என்ற வுடன் ஐயாவின் சிக்கனத்தை எண்ணி யெண்ணி நகைத்தோம். விடுதலை இதழ் அச்சாகி, மேசைக்குக் கொண்டு வரப்பட்டது. முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில், ‘முத்தியாலுப் பேட்டைப் பள்ளிப் புலவர்களுக்கு உலையா? ஓலையா?’ என அச்சிடப் பட்டிருந்தது. உள்ளே அமைச்சருக்கும் எனக்கும் நடந்த உரை யாடல் வெளியாகியிருந்தது. என்ன! இப்படி வெளியிட்டு விட்டீர்களே! என்று கேட்டேன். ‘அமைச்சர் கேட்ட தோரணையைப் பார்த்தால் |