பக்கம் எண் :

88கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

அப்பொழுது பல தோழர் இல்லங்களில் அண்ணா படம் மறைக்கப் பட்டது. அந் நேரத்தில்தான் அண்ணா படத்தைத் தேடி வாங்கி என் இல்லத்தை அழகு படுத்தினேன்.

மீண்டும் ஆசிரியப்பணி

காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றிய ஞானவேல், இராம.பெரியகருப்பன் (தமிழண்ணல்) இருவர் வாயிலாக அப்பள்ளிக்குத் தமிழாசிரியர் தேவை என்பதறிந்து, முயன்று 1949 இறுதியில் அங்குப் பணியில் அமர்ந்தேன். பணியிற் சேர்ந்த மறுநாளே, ‘மீ.சு.உயர் நிலைப் பள்ளியில் ஒரு கருப்புச் சட்டைக்காரர் வந்திருக்கிறாராமே’ என்று ஒரு குரல் வந்தது. குரலுக்கு உரியவர் ‘கம்பனடிப் பொடி’ யென்ற சா.கணேசன்தான்.

ஆனால் நாளடைவில் அவர், என்பால் அன்புபூண்டொழுகினார். அன்று முதல் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை, பல்வேறு எதிர்ப்புக்குரல்களைக் கேட்டுக் கொண்டுதான் வாழ்ந்து வந்தேன், குரல்கள் தோற்றனவேயன்றி என் கொள்கைகள் தோற்கவில்லை.

எங்கள் பள்ளியில் வழிவழியாகப் பார்ப்பன ஆசிரியர்களே தொண்ணூற்றைந்து விழுக்காடு பணியிலிருப்பர். அதனால் அவர்தம் கை ஓங்கியிருக்கும். தந்திரமாகச் சில குறும்புகள் செய்வர். முளையிலேயே அவற்றைக் கிள்ளி யெறிந்து விடுவோம். தமிழையோ தமிழனையோ அவர்களுக்குரிய ‘புத்தி சாலி’த் தனத்தோடு இகழ்ந்த அறிகுறி தெரிந்தாற் போதும்; நானும் தமிழண்ணலும் புலிப் போத்தாக மாறிவிடுவோம்.

ஓராசிரியர், முதலமைச்சர் பக்தவத்சலனாரை அவன், இவன் என்று பேசிவிட்டார். உடனே போர்க்கோலம் பூண்டு விட்டேன். ஆசிரியர் சிலர் தடுத்தமையால் அவர் அடிபடாமல் தப்பினார். நஞ்சு பூசப்பட்ட வஞ்சக வலைகளுக்கு இடையில் நின்றுதான் பணிபுரிந்து வந்தோம். நாங்கள் இருவரும் அமைதியானவர் கள்தாம். ஆனால் எவரேனும் சீண்டிவிட்டால், உறங்கும் புலியை உசுப்பிவிட்ட நிலைதான். எனினும் அனைவரும் ஒரு குடும்பவுணர் வுடன்தான் பணிபுரிந்து வந்தோம்.

தலைமையாசிரியர் கே.ஆர்.சீனிவாச ஐயர் எங்கள் பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். எங்களுக்குப் பொருட் பற்றாக்குறை