பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்89

ஏற்படின் அவர்தான் துணை நிற்பார். அவருடைய அறைக்குள் நுழையு முன்னே ‘என்ன K.S.D. (கா.சு.துரைராசு என்ற என் பெயரை ஆங்கிலத்திற் சுருக்கி அவ்வாறழைப்பர்) பாத்துக் கேளுங்கோ; ரொம்பக் கேட்டுறாதேள்’ என்பார். அதிகம் தேவையில்லை; ஒரு முப்பது போதும் என்போம் ‘அப்படியா! டே காசி! (ஏவலர் பெயர்) ஆத்துக்காரியண்டை போய். K.S.D.க்கு முப்பது ரூபா வேணும்ன்னு சொல்லி வாங்கிண்டு வாடா’ என்பார் பணம் வந்து சேரும்.

பாடங்கள் வாயிலாக மட்டுமின்றி, மாணவர் மன்றம் வாயிலாகவும் மாணவர்க்குத் தமிழுணர்வூட்டுவோம். அவர்கள் ஆர்வத்தையும் வளர்ச்சியையும் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதன் வாயிலாகக் காட்டுவர். ஒரு நாள் தலைமை யாசிரியர் என்னை யழைத்தார். ‘பசங்க இங்கிலீஷ்லே ரொம்பக் குறைச்சலா மார்க்கு வாங்குறாங்க; கொஞ்சம் பாத்துக்கங்கோ’ என்றார்.

‘அதற்கு நான் என்ன செய்ய முடியும்? ஆங்கில ஆசிரியர்களை அழைத்துச் சொல்லுங்கள் என்றேன். ‘அது சரி; பசங்க தமிழ்ப் பாஷைலே ரொம்ப அக்கறை காட்றாங்கோ, அதைக் கொஞ்சங் கொறச்சுக்கங்கோ?’ என்றார். ‘அப்படியானால் என் கடமையைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா?’ என்றேன், ‘இல்லேயில்லே! பசங்ககிட்டே இங்கிலீஷை நன்னாப் படிக்கச் சொல்லுங்கோ; நீங்க சொன்னாக் கேப்பாங்க’ என்றார். பிள்ளைகளின் தமிழுணர்வு அவர் களுக்கு ஏதோ அச்சத்தை உண்டாக்கி விட்டது.

ஒரு முறை, என் மனைவி ஆண் மகவொன்று பெற்றார். இல்லத்திற் பெரியவர்கள் துணையின்மையால், விடுப்பெழுதித் தலைமையா சிரியர்க்கு விடுத்தேன். பெற்றுக்கொண்ட அவர், ‘சனியன்; சனியன் இதே எழவாப் போச்சு’ என்று சொல்லியிருக்கிறார். (இந்த இரு சொல்லும் அவர் வாயில் இயல்பாக வரும்) இதை யறிந்த நான், விடுப்பு வேண்டாமென்று பள்ளிக்குச் சென்று, வழிபாட்டுக் கூடத்தில் ஆசிரியர்களுடன் நின்றேன்.

என்னைப் பார்த்து விட்ட தலைமையாசிரியர், ‘என்ன K.S.D.லீவ் கேட்டிருந்தேளே!’ என்றார். ஆம். விடுப்புக் கேட்டேன்; நீங்கள் சொன்ன சொற்கள் எனக்கு வேதனையைத் தந்தன; பள்ளிக்கு வந்து விட்டேன். என்று, வகுப்பு நடத்த மாடிப் படிகளில் ஏறிக் கொண்டி ருந்தேன். பின் தொடர்ந்து வந்த அவர், இடையில் ‘நீங்கள் ஆத்துக்குப்