பக்கம் எண் :

102கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

உடைத்து நண்ணார் நாண அண்ணாந் தேகி இனிது ஒழுகினல்லது பிறர்க்குத் தீங்கு செய்யாதது" என்று கூறுகிறார்.

"வள்ளியோர்ப் படர்ந்து" (புறம். 47) என்று தொடங்கும் கோவூர் கிழார் பாடலால் பண்டைப் புலவர்தம் உள்ளம், பெற்றது கொண்டு மகிழ்வது, பிறர்க்கு உதவுவது, செம்மல் உடையது, அண்ணாந்து ஏகுவது, இனிது ஒழுகுவது, பிறர்க்குத் தீங்கு செய்யாதது என்னும் உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம். இத்தகுதி வாய்ந்த புலவர் வணக்கத்திற்குரியரே அன்றி, இகழ்வுக்குரியரல்லர் என்பதை யும் தெரிந்துகொள்ளலாம். தம்மை நினைந்து தமிழை மறந்தவர் தாம் இகழ்வுக்குரியரா கலாம். அவரைப் புலவர் எனப் புகல்வதும் பொருந்தாது.