104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
காரத்தில் கோவலன் முதன்மை பெறுதல் வேண்டும். ஆனால், அவனுக்கு முதன்மை தரப்படவில்லை. ஏன்? அவன் தன்னேரில்லாத் தலைவனாகப் படைக்கப்படவில்லை. ஈகையாலும், அழகாலும், தோற்றத்தாலும் மேற்பட்டவனாக அவன் காட்சியளிப்பினும் ஒழுக்கக் கேடனாகப் படைக்கப்பட்டுள்ளான். ஆகவே, அவனுக்கு முதன்மை தாராது தன்னேரில்லாத் தலைவியாகிய கண்ணகிக்கே சிலம்பில் முதன்மை தரப்பட்டுள்ளது. கண்ணகிக்குத்தான் முதன்மை தரப்பட்டுள்ளது, என்பது எவ்வாறு தெரிகிறது? கண்ணகியின் பெற்றோரும் கோவலன் பெற்றோரும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் என்றவிடத்து, ``மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள் - வரி 23 மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள்மன்னோ"- வரி 28 என மங்கல வாழ்த்துப் பாடலில் கண்ணகியை முதலிற் கூறுகிறார் ஆசிரியர். "வருநிதி பிறர்க்கார்த்தும் மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈறெட்டாண் டகவையான்" - வரி 33 கண்டேத்தும் செவ்வேள்என் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்துங் கிழமையான் கோவலன் என்பான்'' - வரி 38 எனக் கோவலனை அதே மங்கல வாழ்த்துப் பாடலில் இரண்டாவ தாகக் கூறுகிறார். மேலும் மனையறம்படுத்த காதையில், கண்ணகியும் கோவலனும் கட்டிலின் மீதமர்ந்தனர் என்பதைக் "கயமலர்க் கண்ணகியும் காதற் கொழுநனும் மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத் திடைநிலைத் திருந்துழி" - வரி 11 என்று கண்ணகியைத்தான் முதலிற் கூறிக் கோவலனை இரண்டாவ தாகக் கூறுகிறார். இவ்வாறு தொடக்கத்திலேயே மங்கல வாழ்த்துப் பாடலிலும் அடுத்த மனையறம்படுத்த காதையிலும் கண்ணகிக்கே முதன்மை தரப்பட்டுள்ளது. |