முன்னுரை "தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதிக் கொண்டிருந்த என்னைக் கதை எழுதுமாறு நண்பர் அறிவழகன் திசை திருப்பி விட்டார். இது 1947ஆம் ஆண்டு நடந்தது; இரண்டாண்டுகள் எழுதினேன். சீர்திருத்தக் கருத்துகளுக்கு வலுவூட்ட வேண்டு மென்று கருதிக் கண்ணெதிரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே அடிப்படை யாகக் கொண்டு இக்கதை களைப் புனைந்தேன். பின்னர் இயல் பாகவே என்மனம் விரும்பிக் கொண்டிருந்த கவிதையுலகிற்குத் திரும்பிவிட்டேன். அக்கனவுலகம் ஒரு தனிஇன்பம் தருவதால், அதனை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றிருந்த என்மொழி நடைக்கும், இன்றுள்ள நடைக்கும் உள்ள வேறு பாட்டை நன்குணரலாம்." மார்ச் 1958 அன்பன், முடியரசன் |