பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

'மனமார - வாயார என்று வெறும் பேச்சாகத் தானே இருக்கிறது. செயலில் ஒன்றும் இல்லையே' என்றாள்.

'என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் பேசுவது ஒன்றும் புரிய வில்லையே! நான் தங்கட்கு விடை எழுதாமல் இருந்ததைக் குறிப்பிடுகிறீர்களா?'

'இதற்குமேல் ஒரு பெண் எவ்வளவுதான் சொல்ல முடியும்? உங்கள் கற்பனையெல்லாம் எழுத்தளவிற்றானா?' என்று சிரித்தாள்.

'உங்கள் எண்ணத்தை - நிலையை இப்பொழுது புரிந்து கொண்டேன். ஆனால், உங்கள் விருப்பம் நிறைவேறுவதென்பது இயலாத ஒன்றுதான்'.

'ஏன் நிறைவேறாது? நான் உங்களுக்கு ஏற்றவளாகத் தோன்ற வில்லையா? அப்படியானால் எங்கள் கல்லூரிக்குப் பேச வந்திருந்த பொழுது என்னையே பார்த்துக் கொண்டி ருந்தீர்களே! அது ஏன்? அந்தப் பார்வையில் எவ்வளவு பொருள்களைப் பொதிய வைத் திருந்தீர்கள்! அதை உண்மை என்று நம்பியல்லவா என் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டேன்' என்று சொல்லும் பொழுது கண்கலங்கி விட்டாள்.

'மல்லிகா! ஆம், அது உண்மைதான்; நான் அன்று உன்னைப் பார்க்கும் பொழுது உன் விழிகளும் என் கருத்தைச் சிதறடித்து விட்டன. அதன் பிறகுதான் என் கதைகளிற்கூட அதிக உயிர்ப்பைக் கண்டேன். என் கற்பனையைக் கிளறி விட்டன உன் கருவிழிகள். ஆனால் என் நிலைக்கு - என் வாழ்வுக்குக் காதல், பொருத்தமாகத் தோன்றவில்லையே! அதனாற்றான் அந்த எண்ணத்தையே விட்டு விட்டேன். நான் திடீரென்று செயலில் - புரட்சியில் குதித்து விடுவேன். அதனால் எனக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கலாம்; அல்லது என் எழுத்துகள் அரசாங்கத்தின் கண்களுக்கு முட்களாகத் தோன்றுவதால் நான் சிறை செய்யவும் படலாம். இந்நிலையில் உள்ள நான், காதல் நாடகத்தில் பங்கு கொள்ள எப்படி முடியும்?' என்று பரிவுடன் கூறினான்.

'அன்பரே! உங்கள் கருத்தில் - கொள்கையில் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்லள் நானும். அதனாற்றான் என் கருத்துக்கேற்ற ஒரு வீரனை - செயலாற்றும் தீரனை நான் தேர்ந்தெடுத்தேன். புரட்சியில் ஆடவர்தாம் மிஞ்சுவர். பெண்கள் அஞ்சுவர் என்பது உங்கள் முடிவா? நாடு பிறனுக்கு அடிமையாகக் கூடாது என்ற எண்ணத்தால் தம் கணவன் மாரைப் போர்க்களம் அனுப்பிய