ஏதாவது பேசியாக வேண்டுமே என்பதற்காக 'என்னுடைய கடிதங்கள் தங்கட்குக் கிடைத்தி ருக்குமே' - என்று மீண்டும் பேச்சைத் துவக்கினாள். 'ஆம், கிடைத்தன; இப்பொழுதுகூட உங்கள் கடிதத்தைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்' - என விடையிறுத்தான். 'ஏன் என் கடிதங்கட்கு விடை எழுதுவதில்லை?' என்று அவள் கேட்கும்பொழுது உரிமையும் அன்பும் கலந்திருந்தது அந்தக் குரலில். அவள் பார்வையில் சிறிது கூட அச்சமோ நாணமோ தென்படவில்லை. நெடுநாள் பழகியவள்போற் பேசினாள். 'ம்ம்.......ஒன்றுமில்லை..... எழுத நேரம் இல்லை' - என்று பேச்சை விழுங்கினான். இதுதான் சமயம் என்று கருதி 'நேரம் இல்லையா? மனம் இல்லையா? '- என்று குறுக்குக் கேள்வி கேட்டாள். 'மனம் இருக்கிறது; மனம் என்ற ஒன்று இருப்பதாற்றானே மக்கள் நிலையைக் கண்டு வருந்துகிறது - கொதிக்கிறது என் உள்ளம்.' 'உண்மையில் உங்கள் மனம் மக்கள் நிலையைக்கண்டு கொதிக்கிறதா? அப்படியானால் நானும் மக்களுக்குள் ஒருத்தி தானே! ஏன் என் நிலைக்கு உங்கள் மனம் சிறிதாவது ...' என்று அவள் சொல்லும்போது அவள் முகம் பெரிதும் கலவரம் அடைந்தது போல் காணப்பட்டது. 'என்ன உங்கள் நிலை? யாராயிருந்தால் எனக்கென்ன? நான் மக்களுக்காக - அவர்களுடைய நல்வாழ்வுக்காக என் உயிரையுங் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். நான் திட்டங் களை மட்டும் தீட்டிக் கொண்டிருக்கும் வெறும் எழுத்தாளன் மட்டுமல்லன்; செயலில் இறங்க வேண்டும் என்று விரும்பு கிறவன். நான் உண்மை யில் மாக்ஸிம் கார்க்கியைப் போன்றவன். இதைத் தற்பெருமை என்று எண்ணிவிட வேண்டாம். அவன் ஒரு சிறந்த எழுத்தாளனாக இருந்த தோடல்லாமல், புரட்சி இயக்கத்தில் பெரிதும் பங்கு கொண்டு பணியாற்றியவன். அவனைப் போலவே நம் நாட்டு எழுத்தாளர் களும் திகழவேண்டும் என்று கனவு காண்பவன் நான். அதனால் உங்கள் நிலையைச் சொல்லுங்கள். உங்கள் பொருட்டு என்னால் இயன்றதை, என் மனமார ...' என்று அவன் முடிக்கு முன்பு இவள் பேசினாள். |