உண்மை என்று நம்பிவிடுகிறார்கள். கடைசியில் ஆடவர்கள், ஆண்டவன் உண்மையில் "கல்" என்பதை மெய்ப்பித்து விடு கிறார்கள். நீங்கள் மட்டுமென்ன கடவுளை...!" "கண்ணே! என்னையும் அப்படி எண்ணிவிடாதே உண்மையில் நான் கூறுகிறேன். பகிரங்கமாகப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறேன். என் வாழ்க்கைப் பயிருக்கு நீதான் மழை! மன மிரங்கிக் கெஞ்சிக் கேட்கிறேன். இனி நீ இங்கிருக்க வேண்டாம். இந்தத் தொழிலும் வேண்டாம். "சினிமா" என்ற முதலை வாயிலும் சிக்க வேண்டாம். நீ அதில் சேர்ந்தால் "சக்கை" ஆக்கப்படுவாய்! "அந்தோ! எத்தனை பெண்கள் சித்திரவதை செய்யப்படு கிறார்கள் நமது நாட்டில். மூடத்தனத்தால், பெண்ணினத்தை - தாய்வர்க்கத்தை - படுகுழியில் தள்ளிப் பாழ்படுத்துகிறார் களே! இனி அந்தக் கொடுமையை ஒழிப்பதே என் குறிக்கோள். அரசியல் அப்புறம். முதலில் சமூகம் விடுதலை பெற வேண்டும். அந்தப் பணியில் நாம் இருவரும் நின்று தொண்டு செய்வோம்" என்று கூறினேன். அவளும் உடன்பட்டாள். "மாறா! பொங்கலன்று எங்கள் இருவர்க்கும் வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற ஏற்பாடு செய்துவிட்டேன். நான் பொங் கலன்று உன் கட்சியில் சேர்ந்து விடுவது என்றும் தீர்மானித்து விட்டேன். இனிமேல் நான் ஒரு புது மனிதன். எல்லா வகை யிலும்தான். நீ என்னிடம் அருவருக்கும் சில குறைகளையும் களைந்து விட்டேன். "மாறா! என்ன நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பேயறைந்தாற் போலப் பேசாமல் சாய்ந்து கொண்டிருக்கிறாயே" என்று தட்டினேன். அப்பொழுதுதான் சுயஉணர்வு வந்தவன் போல எழுந்தான். "ம்ம்! சுந்தரம்! உன் மாற்றத்திற்கும் நீ செல்லப்போகும் புதிய மார்க்கத்திற்கும் என் ஆசி" என்றான். "அப்பா! மாறா! ஆசியோடு மட்டும் நின்று விடாதே! உன்னுடைய முழு ஒத்துழைப்பும் இருந்தால்தான் அன்று திருமணம் சிறப்பாக நடைபெறும். நீதான் எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும்." என்று சொல்லிவிட்டுப் பிரிந்து விட்டேன். இரண்டொரு நாளில் என் நண்பன் மாறனைக் காணவே யில்லை. இருக்கும் இடமும் தெரியவில்லை. |