| 18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
ஆண்டுகளாக உலகக் குழந்தைகள் விழா என்று கொண்டாடி வருகிறோமல்லவா? இந்த விழா முன்பே நம்நாட்டில் உயரிய முறையில் கொண்டாடப் பெற்று வந்திருக்கிறது. நாம் மறந்து விட்டோம். 'தசரா' என்றும் 'நவராத்திரி' என்றும் 'சரசுவதி பூஜை' என்றும் 'ஆயுத பூஜை' என்றும் எப்படியெல்லாமோ பெயரை மாற்றி வைத்து, மயங்கிப் பெரியவர்களாகிய நாம் விளையாடிக் கொண் டிருக்கிறோம். இவ் விழா குழந்தைகள் விழா தமிழர்க்கே உரிய விழா என்பதில் ஐயமே இல்லை. இதன் பெயர் மறையும்படியாக மேலே பூசப்பட்ட வண்ணங்களைக் கொண்டும், கட்டுக் கதை களைக் கொண்டும், பெயர்களைக் கொண்டும் அயலவர் விழா வென்று மயங்கிவிட்டோம். விழாவின் நிகழ்ச்சிகளை நோக்கும் அளவி லேயே உண்மை புலனாகும். எனினும் இதன் உண்மைப் பெயரையும் அறிந்துகொள்வது சாலப் பயன்தரும். இதனை யறிந்துகொள்ளச் செட்டிநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லுதல் வேண்டும். இப் பகுதி மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வந்தனர். எப்படியோ இப்பொழுது அருகிவிட்டது. இவ்விழாவினை 'மாநோம்பு' என்றும் 'மகர் நோம்பு' என்றும் அப்பகுதியில் இன்றும் கூறுவதைக் கேட்கலாம். அச்சொல்லின் உண்மையுருவம் வேறு. அவ்வுருவம் பேச்சு வழக்கிற் சிதைந்து திரிந்து உருமாறியிருக்கிறது. மகார் நோன்பு என்பதே அதன் முழு உருவம். மகார் என்னுஞ் சொல் சிறுவர் எனப் பொருள்படும். நோன்பு எனுஞ்சொல் விழா, திருநாள் எனும் பொருளில் வரும். மகார் நோன்பு என்னும் பெயர். சிறுவர் விழா - குழந்தைகள் விழா என்னும் பொருளைச் சுட்டி நிற்கிறது. இவ்வாறு குழந்தைகளுக்குக் கொலுவும் கோலாட்டமும் காட்டி விளையாட்டுணர்வூட்டி அவ்வழியே கல்வியைத் தொடங்கிப் படைப் பயிற்சியும் அளித்து வளர்த்துவந்தனர். நம் மக்கள்தாம் கற்பனை வளம் மிக்கவர் அல்லவா? கல்விக்குக் கலைமகள் என்றும் வீரத்துக்குக் கொற்றவையென்றும் கற்பனை யுருவம் கொடுத்தனர். காலப் போக்கில் அவை சமயச் சார் புடையனவாகி, சரசுவதிபூசை, ஆயுதபூசை எனப் பெயர் பெற்றன. கல்வியையும் படைக் கலத் தையும் என்று பூசனைப் பொருளாக் கினரோ அன்றே கல்வியிலும் வீரத்திலும் பின் தங்கிவிட்டனர் தமிழர். தெய்வங்களின் பெயரால் கள்ளக் கணக்குச் சுவடி களையும் வஞ்சனைத் துலாக் கோலையும் |