வழிபடத் தொடங்கிப் பொய்யராக - போலியராக மாறிவிட்டனர். மகார் நோன்பு என்னும் பெயரை மறந்ததால் - மாற்றியதால் நேர்ந்த விளைவு களை எண்ணிப் பாருங்கள். புரட்டாசித் திருநாள் தமிழர்க்கே உரிய திருநாள் என்ற உண்மையையும் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப் பெற்ற திருநாள் என்ற உண்மையையும் உலகுக்குணர்த்த மகார் நோன்பு என்ற இப் பெயர் ஒன்றே சாலும். இப்பெயரும் நிகழ்ச்சியும் மற்றப் பகுதிகளில் வழக் கொழிந் தமை போலச் செட்டிநாட்டுப் பகுதியிலும் வழக் கொழிந் திருப்பின், இவ் விழாவையும் இதன் உண்மைகளையும் இழந்திருப் போம். ஆதலின், இன்னோரன்ன பழந்தமிழ்ச் சொற் களை வழக்கொழிய விடாது காத்தலும் அவற்றுட் பொதிந்துள்ள உண்மை களை ஆய்தலும் தமிழ் மக்களுக்குத் தலையாய கடமையாகும். இக் கடமை காத்து ஒழுகுவோமாகின் நாம் இழந்த பல உரிமைகளை - செல்வங்களை-நாகரிகங்களை மீண்டும் பெற்றுத் திகழலாம் என்பது ஒருதலை. ('தினமணிக் கதிர்' இதழில் வெளிவந்தது) |