பக்கம் எண் :

200கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

சகோதரிகளின் அழுகுரல் கேட்கும் அவன் பாட்டில் காலத்துக் கேற்ற கருத்துகள் ஓடி ஓடிச் சிரித்து விளையாடும். ஆனால்.. அவன் கவிதையின் பெருமையை - அறிவின் திறனை யார் அறிகின்றார்? அறிந்தாலும் போற்றுவார் யார்?

வறுமையிலே வாடுகிறது அவன் உள்ளம். அதையும் தாண்டித் தான் தருகிறான் புரட்சிக்கவிதைகளை. உண்மையான கவிஞன் உள்ளம், காசு பணத்தைப் பற்றிக் கவலைப்படாது என்னும் உண்மையை அவன் வாழ்க்கையிலே தான் படித்தறிந் தேன்.

அவன் என் உயிர் நண்பன். அவனைப் பற்றி - அவன் கவிதையைப் பற்றி - வறுமையைப் பற்றி - அடிக்கடி எண்ணுவேன். அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்ச்சி என்னைத் தூண்டும். ஆனால் என்னிடமும் பொருள் இல்லை என்பதை, சிந்தனை முடிந்த பின்புதான் உணர்வேன். பணமிருந்தால் அந்த எண்ணம் தோன்றுவது கொஞ்சம் அரிதுதானே! பணம் இல்லா விடினும் எப்படியேனும் அவனை உலகுக்குக் காட்ட வேண்டும் - அவன் கவிதையால் என் நாட்டிலே சமதர்மத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். பல பத்திரிகைகளுக்கு அவன் பாடல்களை அனுப்பினேன். சில நாளில் என்னிடமே திரும்பி வந்துவிட்டன. மக்கள் மன்றத்திலே மலரட்டும் என்று எண்ணி னேன். தோல்வி! ஏன்? தமிழ்நாட்டிலே பிறந்த ஒரே குற்றத்திற்காக அந்தத் தோல்வி. அவன் வேற்று நாட்டிலே பிறந்திருந்தால் ஒவ்வொரு எழுத்தும் பொன்னாற் பொறிக்கப்படும்: இங்குப் பிறந்ததால் அவன் கவிதைகள் போற்றுவாரின்றி அழிந்து விடுமோ? என்று வருந்துவேன்.

அறிஞர்களை - அல்லல் எதுவரினும் மக்களுக்கே தொண்டு செய்யும் பெரியார்களை அலட்சியப்படுத்துவது - அவமானப் படுத்துவது தானே நம் நாட்டு மக்களின் பெருந் தன்மை! உண்ணும் போது - உறங்கும்போது - உலவும்போது எப்பொழுதும் அவனைப் பற்றிய எண்ணந்தான். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன். முடிவின் விளைவுதான் மேலே கண்ட - வானவில் - என்ற பத்திரி கைச் செய்தி.

பத்திரிகைச் செய்தி வந்த சில தினங்களில் கண்ணன் கவிதை வராத பத்திரிகை ஒன்றேனும் இந்நாட்டில் இல்லை! புகழத் தொடங்கிவிட்டன. "புரட்சிக்கவி" "தென்னாட்டுத் தாகூர்"