10 அழிந்து விடுமோ? கவிஞர் மறைந்தார். கவிஞர் கண்ணனும், அவர் நண்பரும் கட்டு மரத்தில் ஏறிக் கடலில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று கட்டுமரம் கவிழ்ந்து விட்டது. கவிஞரைக் காணவில்லை. நண்பர் மட்டும் உயிரோடு கரை சேர்ந்தார். விடுதலை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் வீறுநடை கொண்ட கவிதைகளைத் தமிழகத்திற்குத் தந்த கவிஞர் இவர். கற்பனைச் செறிவும், உவமை நயமும், புதுமைப் பொலிவும் இவர் கவிதைகளிலே மின்னித் தவழ்ந்து விளையாடும். இத்தகைய கவிஞர் மறைவு தமிழ் நாட்டுக்குப் பேரிழப்பாகும். - வானவில். சாதி சமயங்களை மோதித் தகர்த்தெறிய வேண்டு மென்பது அவன் எண்ணம். ஏழைகளின் துயரத்தை - அவர் களுக்கு அளிக்கப் பட வேண்டிய உரிமைகளை - உடைமை களை அஞ்சாது எடுத்துச் சொல்லுவான். பெண்மையைப் பாழ் படுத்தும் பேதமையை வெறுப்பான். புதியதொரு சமுதாயத்தை அமைக்க - புத்துலகைக் காணத் திட்டம் தருவான். கண் மூடித்தனங்கள் மண்மூடிப் போக வேண்டும் என்பான். சமூகம் - பொருளியல் - அரசியல் மூன்றிலும் புரட்சி வேண்டும் என்று எக்காளமிடுவான். இவ்வளவும் அவன் கூறுவது உரை நடையிலே அன்று, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிதையிலே. முன்னோர் காணாத உவமைகள் தாண்டவமாடும் அக்கவிதை யிலே, உயிர்ப்புள்ளது - உணர்ச்சியுள்ளது - ஒப்பில்லாதது அவன் கவிதை. அவன் கவிஞன். புரட்சிக் கருத்துள்ள புதுமைக் கவிஞன். புறாவை - கடலில் காணும் சுறாவை, உழவனை - உணவின்றி வாடும் கிழவனை, மாலையை - ஆலைத் தொழிலாளியின் வேலை யைப் பாடுவான். வைதீகரின் மமதையைச் சாடுவான். விதவைச் |