பக்கம் எண் :

198கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

கிறாயே! இது நம் கழகத்திற்கும் நமக்கும் பெரிய அவமான மல்லவா? இந்தச் சின்னங்களை ஒழிக்கும் வரையில் நம்மிடையே நீ ஓர் அவமானச் சின்னந்தான் என்று சொன்னேன். அது, உன் மனத்தை இவ்வளவு வருத்தும் என்று தெரிந்தால் சொல்லியிருக்க மாட்டேன். நானே நேரில் கூடக் கேலியாகப் பேசியிருக்கிறேனே! அது குற்றமானால் என்னை மன்னித்துவிடு. நண்பன் என்ற முறையில் மன்றாடிக் கேட்கிறேன்?" என்றான்.

கண்ணப்பனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "இந்த அவமானச் சின்னங்களையா சொன்னாய்? அப்பாடா! நேற்று முழுதும் என்னைக் கொன்று விட்டதே அந்தச் சொல். ஆம்; நான் இன்னும் அப்படியிருப்பது அவமானந்தான். இதோ அந்தச் சின்னங்களை ஒழித்துவிட்டேன். இனிமேல் நான் விடுதலைச் சின்னம். புரட்சியின் சின்னம்" என்று சொல்லிக் கொண்டே துள்ளிக் குதித்து ஓடினான் கண்ணப்பன்.