சென்றதைப் பற்றிக் கவலைப் படுவதில் பலனில்லை. அதோ! அப்பாவும் வந்து விட்டார். சோறு போடுங்கள். சாப்பிடலாம்" - என்று எழுந்து சென்றான். மறுநாள் கண்ணப்பன் தன் உயிர் நண்பன் ஞானம் வீட்டிற்குச் சென்றான். அவனைத் தனியாக அழைத்தான். "ஞானம்! நீ சீர்திருத்தவாதிதானே?" "ஆம், கண்ணப்பா! இதில் என்ன உனக்குத் திடீர் என்று சந்தேகம் வந்தது?" "சரி; மறுமணத்தை ஆதரிக்கிறாய் அல்லவா?' "ஆம், மனமார ஆதரிக்கிறேன்." "கலப்பு மணம்....?" கட்டாயம் வேண்டுமெனறு வற்புறுத்திக் கூறுகிறேன். என்னைப் பற்றித் தெரியாத என்ன? ஏன் இப்படி எல்லாம் படபட என்று கேட்கிறாய். "ஒன்றுமில்லை ஞானம்! இப்படி எல்லாம் சொல்லி விட்டுச் செயலில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ளு கிறாயே என்றுதான் வருத்தப்படுகிறேன்." "என்ன கண்ணப்பா! அப்படி ஒன்றும் நான் மாறி நடந்த தாகத் தெரியவில்லையே. அதற்கேற்ற சந்தர்ப்பமும் என் வாழ்வில் இன்னும் குறுக்கிடவில்லையே?" "உன் வாழ்க்கையை நான் சொல்லவில்லை. கலப்புமணம், மறுமணம் இவற்றை ஆதரிக்கின்ற நீ என் வாழ்க்கையைக் கேவல மாகப் பேசியிருக்க வேண்டாம்". "உன் வாழ்க்கையைக் கேவலமாகப் பேசினேனா? இது என்ன விந்தை! கண்ணப்பா! யாரிடம் இப்படியெல்லாம் பேசுகிறாய்? நானா உன்னைக் கேவலமாகப் பேசுவேன்? அதுவும் உன் வாழ்க் கையையா? "ஆம்; நேற்றுக் கழகத்தில் என்னை அவமானச் சின்னம் என்று சொன்னது என் வாழ்க்கையையல்லாமல் வேறென்ன?" "அட பைத்தியமே! அதைச் சொல்லுகிறாயா? அது உன் வாழ்க்கையையோ வரலாற்றையோ குறித்ததன்று. நீ நம் கழகத்தில் சேர்ந்த பிறகும் மதச்சின்னங்களை விடாமல் அணிந்து கொள்ளு |