பக்கம் எண் :

196கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

அவருக்கும் போக மனமில்லை. அப்பாவோ நெடுநேரம் ஆகியும் வரவே இல்லை. இருட்டிவிட்டது. இருள் எங்கள் எண்ணத் திற்கு உதவிசெய்தது. நாங்கள் வீட்டை மறந்து விட்டோம் - ஏன் உலகத்தையே மறந்து விட்டோம். அந்த நிலையில் அப்பா மட்டும் எங்கே நினைவிற்கு வரப்போகிறார்?

"சீதா!சீதா!" என்று அழைத்துக் கொண்டே என் அப்பா வந்துவிட்டார். அப்பொழுதுதான் எங்கள் நிலைமை நினைவிற்கு வந்தது. வெடவெடத்து விட்டது எனக்கும் அவருக்கும். அப்பா கண்டுவிட்டார். அவர்தான் முன் கோபக் காரராயிற்றே. விழி பிதுங்கிவிடும் போல் பார்த்தார். எனக்கு ஒரே பயம். ஆனால் வெளியே தெரிந்தால் கேவல மாகுமே என்று சத்தம் போடாமல் பார்வையளவிலேயே நின்று விட்டார்.

மறுநாள் மாலை கறுப்பண்ணன் என்பவனோடு தனியாகப் பேசிக்கொண்டிருந்தார் என் அப்பா. நான் அதைக் கவனித்து விட்டேன்.

"சும்மா இருங்கசாமி - இன்னும் ஒரு வாரத்திலே அந்த ஆசாரிப் பயலே தொலச்சுடுறேன்" - என்று கறுப்பண்ணன் சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது. செய்தி இன்னதென்று புரிந்து கொண்டேன். அந்த நிலைக்கு என் மனம் இடந்தர வில்லை. அவருக்குக் கடிதம் மூலம் அறிவித்தேன்.

சில நகைகளோடும் கொஞ்சம் பணத்தோடும் சென்னை வந்து சேர்ந்தோம். இருப்பதை வைத்து ஒரு நகைக்கடை வைத் தோம். செல்வம் சேர்ந்தது. உன்னையும் பெற்றெடுத் தேன். உன்முகத்தைப் பார்த்துப் பார்த்து என் கவலைகளை எல்லாம் மறந்துவிட்டேன்.

நிறுத்த கண்ணா, இதுதான் என் கதை. இதுவரை இந்தச் செய்தி ஒன்றும் உனக்குத் தெரியாது. நானும் சொல்லவில்லை. அந்தப் பழைய சம்பவங்களை எல்லாம் இன்று நீ நினைப்பூட்டி விட்டாய்! இது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்துவிட்டது போலிருக்கிறது. அதனால் உன்னை 'அவமானச் சின்னம்' என்று சொல்லியிருக்கிறார்கள்".

படித்துக் கொண்டிருந்த கண்ணப்பன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே "அம்மா! சரி. இதற்காகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.