| 202 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
எனக்கு வரவேற்பும் பாராட்டும் அளித்துப் பெருமைப் படுத்திய உங்கள் அனைவருக்கும் வணக்கம் கடலில் கவிழ்ந்ததும் கட்டு மரத்துண்டு ஒன்றைப் பிடித்த வண்ணம் மிதந்து கொண் டிருந்தேன். அப்பொழுது சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று என்னைக் காப்பாற்றிச் சிங்கப்பூரில் கொண்டு சேர்த்தது. போர் முடிந்ததும் என் நாட்டையும் என் இனத்தையும் காண்கிறேன். மீண்டும் உங்களுக்குத்தான் எனது மூச்சு வணக்கம்." கண்ணன் நான் கூறியபடியே பாராட்டுக் கூட்டத்திலே பேசிவிட்டான். அப்பப்பா எவ்வளவு புகழ்மாலைகள்! பிறகு நாட்டுமக்கள் "நிதியளிப்பு" "படத்திறப்பு" அனைத்தும் செய்யத் தொடங்கினர் என் நண்பன் கண்ணனுக்கு. கவிஞனுக்குப் புகழ் வளர்ந்து கொண்டிருந்தது. அன்று வறுமையில் வாடிய கண்ணன் இன்று செல்வத்திலே புரள்கிறான். "இளமையை வறுமையிலே நனைத்து நனைத்துக் கெடுத்து விட்டேன். பணம் மக்களின் நன்மைக்குத்தானே. இதையறியாமல் முன்பெல்லாம் பணம் கூடாது என்றிருந்து விட்டேன். இனிமேலாவது நன்றாக அனுபவிக்க வேண்டும்" என்று முடிவு கட்டினான். பணம்... பணம்... ஆம் அவன் மனம் பணத்திலே சென்று கொண்டிருந்தது. அந்த ஆசை எழுந்த பின்பு கேட்கவா வேண்டும். சினிமாக்காரர்கள் வீசிய வலையிலே எளிதிலே சிக்கிவிட்டான். அம்மட்டா? அரிவையரின் கடைக்கண் வீச்சிலே சொக்கி விட்டான். என்னை மறந்தான். ஏன்? தன்னையே மறந்தான். இப்பொழுது அவனுக்கு என்னைவிடச் சிறந்த தோழர்கள் கருப்பு - சிவப்பு - வெள்ளைச் சீசாக்கள்தாம். அவன் மாறினான். ஆனாலும் கவிதையின் எழில் மாறவில்லை. உயிர்ப்பும் உணர்ச்சியும் பின்னிக் கிடந்தன. ஒருநாள் தற்செயலாக அவனைக் கண்டேன். "கண்ணா! புராணங்களைப் பொசுக்கச் சொன்ன உன் பேனா முனை இன்று அவைகளுக்கு அரணாவதா? உன் கற்பனை, சினிமா விலா நுழைய வேண்டும்? அது சீர்திருத்த உருவிலே நுழைந் திருந்தாலும் நான் மகிழ்ந்திருப்பேன். மக்களை மறுபடியும் மடமைக்கு இழுத்துச் செல்கிறதே உன் கற்பனை!" என்று வருந்திக் கேட்டேன். "நண்பா! என்ன இப்படிப் பேசுகிறாய்! உலகமே உனக்குத் தெரியவில்லையே! பணம் நிறையக் கிடைக்கிறது. அதனால் படத்துறையில் இறங்கினேன். புராணத்தை எழுதினாலும் என் |