"ஒன்றுமில்லை யென்றால் உம்ம் என்று ஏன் இருக்க வேண்டும்?" என்று அவன் முகத்தைத் தன் பக்கமாக நிமிர்த்தினாள். "பொன்னம்மா! அப்பா, கலியாணத்திற்கு ஏற்பாடு செய்திருக் கிறராம்" என்று அரங்கசாமி சொன்னான். "அப்பாவுக்கு இது தெரியுமா?" என்று பெருமகிழ்ச்சியுடன் கேட்டாள் பொன்னம்மாள். "இது தெரிந்திருந்தால் திருச்சிராப்பள்ளியில் பெண் பார்த் திருப்பாரா?" என்று சிறிது கோபமும் வருத்தமும் கலந்த குரலில் பேசினான். "திருச்சிராப்பள்ளியில் பெண்ணா" என்று திடுக்கிட்டு நின்று "அப்படியானால் என் கதி" என்றாள். "பொன்னம்மா! நான் என் தாயாரிடம் இப்போது திருமணம் வேண்டாமென்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அப்பா கேட்பதாகக் காணோம். ஒரே பிடிவாதமாக இருக்கிறார். அவருடைய கோபத்தை மீறவும் முடியாது போல் தோன்றுகிறது. என்ன செய்வதென்றே எனக்குத் தோன்ற வில்லை" என்று சொன்னான். "அப்படியானால் நான் என்னாவது? என் மாமாவும் கோபக் காரர்தானே! நான் இப்போது இரண்டு மாதம் தலை முழுகாமல் இருக்கிறேன். இந்த நிலையில் என் வாழ்வு எப்படியாவது மாமா வுக்குத் தெரிந்தால் வெட்டி ஆற்றில் விட்டு விடுவாரே! அது உங்களுக்குச் சம்மதந்தானா?" என்று அழுது விட்டாள். அரங்கசாமி பேசாமலிருந்தான். அவனுக்கும் அவளை அந்த நிலையில் கைவிட மனமில்லை. என்னென்னவோ எண்ணினான். கடைசியாக எங்காவது ஓடி விடலாம் என எண்ணினான். ஓடி என்ன செய்வது? திடீரென்று எங்கே வேலை கிடைக்கும்? வேலை யில்லாமல் இருவரும் திண்டாடுவதா என்ற கேள்விகள் குறுக் கிட்டதால் அந்த எண்ணத்தையும் விட்டு விட்டான். கடைசியில் அவன் தந்தைக்குப் பணிவதைத் தவிர வேறுவழியில்லை என்று கண்டான். அதனால் அவன் ஒன்றும் வாய்திறக்கவில்லை. இருந் தாலும் அவன் கண்கள் ஒவ்வொரு சொட்டாக நீரை உதிர்த்துக் கொண்டிருந்தன. "என்ன பேசாமல் இருக்கிறீர்கள்; இதற்குத்தானா உங்களை நம்பினேன்? என்னையே கலியாணம் செய்து கொள்கிறேன் என்று |