இந்நூற்றாண்டு கவிதைக்கு ஒரு நற்காலமே. அந் நற்காலம் பொற்காலமாக மாறுங் காலம் விரைந்து வந்துகொண்டிருக் கிறது. "மிக விரைவிலே தமிழின் ஒளி உலக முழுதும் பரவா விட்டால் என் பேரை மாற்றி அழையுங்கள்" - என்று பாரதியார் கூறினார். அக்கூற்று வாய்மையாகிவிட்டது. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவிவரும் காலம் இது. அவ்வோசையைக் கவிதைகளாற்றான் நன்கு ஒலித்துக் காட்ட முடியும். பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாகிய நெட்டைக்கனவு நனவாவது உறுதி; உறுதி. தமிழ்ப் பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலிக்கும் நாள் நம் எதிரே காட்சியளிக்கிறது. (1968 உலகத்தமிழ் மாநாட்டு மலரில் வெளிவந்தது) |